உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டும் 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இந்தியா கூட்டணியால் பாஜக எதிர்பார்த்த அளவிற்கான வெற்றி கிடைக்காத நிலை உள்ளது. பாஜக கூட்டணிக்கு இந்தியா கூட்டணி கடும் சவாலாக உள்ளது. 200 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருவதாக கூட்டணியுடன் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.