ஆண்டனீஸ் ஸ்போக்கன் இங்லீஷ் அகாடமியின் 26 ஆவது ஆண்டு இரண்டுமாத இலவச கோடை பயிற்சி நிறைவு விழா

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அன்னை கல்லூரியில், ஆண்டனீஸ் ஸ்போக்கன் இங்கிலீஷ் அகாடமியின் 26 ஆவது ஆண்டு இலவசப் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் ஹரிராம் ஜோதி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். எளிய, கிராமப்புற பின்தங்கிய பகுதியிலிருந்து வரும் மாணவ மாணவியருக்கு இந்த இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் 300 மாணவர்களுக்கு மேல் பயிற்சியை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டதற்காக மாணவர்களையும் சிறப்பாக நடத்திய ஆசிரியர் ஆண்டனியையும் பாராட்டினார். பச்சை பூமியின் தலைவர் கவிஞர் வேங்கை ஆரோன், அன்னை கல்லூரியின் தாளாளர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கீதா, கொத்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சேக் முகமது, மணவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாச்சலம், ஆங்கில ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அகாடமியின் ஆசிரியர் ஆண்டனி அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது பத்தாயிரம் மாணவர்கள் இதுவரை பயன் அடைந்து இருக்கிறார்கள் என்றும் இந்த ஆண்டு 300 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள் என்றும் பயிற்சியில் அனைத்து நாட்களிலும் கலந்து கொண்ட மாணவர்கள் ஐந்து பேருக்கு தலா ரூபாய் 500 வழங்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகச்சிறந்த பின்னூட்டம் வழங்க ஆசிரியர் பாஸ்கர் நன்றியுரை கூறினார்.