புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்க்கெட் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி வைபவ பூஜை சிறப்பாக மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4 -ஆவது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம், ஸ்ரீ நரசிம்மர், லெட்சுமிநரசிம்மர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், நொங்கு மற்றும் பழங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது, நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர், ஏற்பாடுகளை அனுமன் திருச்சபையினர் ஆன்மிக நெறியாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில், ஆன்மீக அன்பர்கள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர், அனைவருக்கும் இளநீர், நொங்கு மற்றும் பழங்கள் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.