திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள்  கோயிலில் வைகாசிவிசாகப் பெருந் திருவிழாவை முன்னிட்டு, இரட்டைத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த  13_ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாhர்கள் சார்பில் சாமிக்கு 18வகையான அபிஷேகங்கள் பல்லாக்கு ரதத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான இரட்டைத் தேரோட்டம் வானவேடிக்கை ழுழங்க,  பழங்கால கலாச்சாரங்கள் நடனங்களுடன்  வெகு விமரிசையாக  நடைபெற்றது. பெரிய தேரில் ஸ்ரீஅரங்குளநாதர் மற்றும் பெரியநாயகி அம்பாளும், சிறியதேரில் பெரியநாயகி அம்பாளும் எழுந்தருளினர். தேர் காலை 10.30 மணியளவில் புறப்பட்டு தெற்குவீதி, மெயின் ரோடு வழியாக மதியம் 12மணிக்கு நிலையை வந்தடைந்தது. 

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, தோப்புக்கொல்லை, அசோக்நகர், மேட்டுப்பட்டி, ஆலங்குடி, திருக்கட்டளை, கொத்தமங்கலம,; வடகாடு, பாத்தம்பட்டி, கத்தக்குறிச்சி, கீழையூர், போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து 5ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் குருக்கள் வைத்தீஸ்வரன், ஞானஸ்கந்தன், மீ.ஸ்ரீராம், சு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறை, தீயணைப்புதுறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்தறை அதிகாரிகள் செய்திருந்தனர்