திருவரங்குளம் அருகே குறுந்தடிமனை கிராமத்தில் விவசாயிகளுக்கான ஆடியோ கான்ஃபரன்ஸ் நிகழ்வு

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 50;

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் குறுந்தடிமனை கிராமத்தில் விவசாயிகளுக்கான ஆடியோ கான்ஃபரன்ஸ் நிகழ்வு நடைபெற்றது.

இதில்  25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் நிலங்களின் செய்துள்ள பயிர்களை நெல், எள், நிலக்கடலை, தென்னை, காய்கறிகள், வாசனை பூ பேய்களில் பாதிக்கப்பட்ட நோய் மற்றும் பூச்சி இவைகளின் சந்தேகங்களுக்கு வந்து பயிர் மருத்துவரிடம்  அதில் வரக்கூடிய வேர் தண்டு அழுகல் கரையான் தேங்காய் சத்து குறைபாடு தேங்காயில் சுருள் வெள்ளை ஈ காய்கறி மற்றும் பூக்களில் உறிஞ்சும் பூச்சிகள் போன்ற பலவிதமான பயிர்களை தாக்கக்கூடிய கிருமிகளுக்கு எப்படி குறைந்த செலவில் கையாள்வது என்பது பற்றி அந்நிகழ்வில் கலந்து கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிர் மருத்துவர் டாக்டர் கே.பாரதிதாசனிடம் கேட்டு அதற்கான தீர்வை பெற்றுக் கொண்டனர்.

மேலும் நெல்லை எப்படி நேரடி விதைப்பு செய்து அதில் மேன்மை அடையலாம் அதற்கான ரகங்கள் என்ன என்பது பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்நிகழ்வினை தஞ்சாவூர் எம்.எஸ்.சுவாமிநாதன்  வேளாண் மற்றும் அறிவியல் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ராவே நிகழ்வுக்காக கிராமங்களில்  தங்கி விவசாயிகளுடன் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். நவீன் குமார், நிஷாந்த், பார்த்திபன், பிரபாகர் சூசை ,பிரனேஷ், சரவணகுமார் சதீஷ், சேக் தாவூத், சிவசங்கர் ஆகியோர் கிராம மக்களுடன் கலந்து இந்நிகழ்வை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலர் விமலாவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.