எல்பிஜி விபத்துகளை குறைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பல்வேறு திட்டங்களை வழிவகுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக 2024மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் அடிப்படைப்பாதுகாப்புச்சோதனைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக நடைப்பெற்று வருகிறது. வாடிக்கையாளர் இல்லங்களில் சிலிண்டர் விநியோகிக்கும் நபர் கட்டணமில்லாமல் இந்த பாதுகாப்பு சோதனைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் எல்பிஜி விபத்துக்களால் மோசமாகப்பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்களுடைய பகுதிகளுக்கு சென்றுவிழிப்புணர்வு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இதனைசீராகவும்செம்மையாகவும்செய்வதற்காக மதுரை இண்டேன் வட்டார அலுவலகத்தின் தலைமைஅதிகாரி பிரேமா இன்று புதுக்கோட்டையில் உள்ள வண்டிப்பேட்டை காலனியில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு எரிவாயுவை எவ்வாறு பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் உபயோகப்படுத்துவது என்றும், சிலிண்டரை பெறும்போது செய்ய வேண்டிய சோதனைகளும்,அதன் பிறகு பாதுகாப்பானகையாளுதலுக்கான முன்னெச்சரிக்கைகள் பற்றி வழிமுறைகளும் கூறினார். இதற்கான செயல்முறைவிளக்கங்களும் செய்துகாண்பிக்கப்பட்டன. 1906 முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக சுரக்க்ஷா குழாய் மாற்றவேண்டும் என்று கூறினார் சுமார் 20 வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மின்சாதனங்கள்,எரிவாயு அடுப்பின் அருகில் இருப்பதினால் ஏற்படும் அபாயம் குறித்து தெரிவித்தார். உடன், மதுரை இண்டேன் வட்டார அலுவலகத்தின் மூத்த மேலாளர் மீனா,ஸ்ரீசிந்தாமணிகணபதி இன்டேன் காஸ் பங்குதாரர் சனந்தனன், செந்தாமரை இன்டேன் காஸ் பங்குதாரர் சந்திரசேகரன் ஆகியோர் இருந்தனர். நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.