பதினொன்றாம் வகுப்பு  அரசு பொதுத் தேர்வில் வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை

2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  இன்று வெளியானது. இதில் புதுக்கோட்டை  வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் பெருமாளான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மாணவி எஸ்.மீனா 600 க்கு 588  மதிப்பெண்களும் அதேபோல் மாணவி  எஸ். யுபாசனா  600க்கு 587  மதிப்பெண்களும் பி.தர்ஷினி  600க்கு 584 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை  பள்ளியின் தலைவர் தேனாள் சுப்பிரமணியன்,  பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, முதல்வர்  சிராஜுதீன்  ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல்லா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.