வருமான வரி செலுத்துவோருக்கு உதவ, வருடாந்திர தகவல் அறிக்கை என்னும் புதிய ஏற்பாட்டினை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறையானது வருடாந்திர தகவல் அறிக்கை(Annual Information Statement -AIS) என்ற புதிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது. இது வரி செலுத்துவோருக்கு, தங்கள் வரிகளை பாதிக்கும் நிதி தரவுகளை பார்வையிடவும், உறுதிப்படுத்தவும் அனுமதிக்கிறது. இதன் துல்லியத்தை உறுதி செய்வதற்காக காட்டப்படும் பரிவர்த்தனைகள் பற்றிய கருத்துக்களை வரி செலுத்துவோர் விரும்பினால் வழங்கலாம். வரி கழிப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் மற்றும் அவற்றை அறிக்கையிடும் நிறுவனங்களின் தரவுகளுக்காக இந்த புதிய ஏற்பாடு உதவும் என வருமான வரித்துறை கூறுகிறது.
வருமான வரித்துறை சார்பில் நேற்றைய தினம் அறிமுகமான வருடாந்திர தகவல் அறிக்கை எனும் புதிய செயல்பாடு மூலம், வருமான வரி செலுத்துவோர் தங்களது தகவல் உறுதிப்படுத்தல் செயல்முறையின் நிலையை சரிபார்க்க முடியும். இந்த ஏஐஎஸ் ஆனது பல தகவல் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட நிதி தரவுகளின் அடிப்படையிலும், வரி செலுத்துவதால் மேற்கொள்ளப்படும் அதிக எண்ணிக்கையிலான நிதி பரிவர்த்தனைகளின் விவரங்களை வழங்குகிறது. ஏஐஎஸ் காண்பிக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் மீதும் கருத்துக்களை வழங்குவதற்கான செயல்பாடு, வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய தகவல் மூலத்தால் வழங்கப்பட்ட தகவலின் துல்லியம் குறித்து வரி செலுத்துவோர் கருத்து தெரிவிக்கவும் இவை உதவும். தவறானவை குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில், தானியங்கு முறையில் அவர்களின் உறுதி படுத்தலுக்காக ஆதாரத்துடன் எடுத்துக் கொள்ளப்படும். பல சந்தர்ப்பங்களில் கூட்டாக வைத்திருக்கும் நிலையான வைப்புத் தொகை போன்றவற்றில் வரி செலுத்துவோர், கடந்த காலங்களில் சிக்கல்களை எதிர்கொண்டனர். இது உள்ளிட்ட வரி செலுத்துவோர் தரப்பில் சவாலாக தென்படுபவை, அவற்றுக்கு விடை தேடும் வகையில் வருமான வரித்துறை செயல்பாடுகளை உருவாக்க தூண்டியது.
இவற்றின் அங்கமாக ஏஐஎஸ் தற்போது நடைமுறைக்கு வருகிறது.வரி செலுத்துவோரின் பின்னூட்டத்தை பகுதி அல்லது முழுமையாக ஏற்பது அல்லது நிராகரிப்பதன் மூலம் மூலத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம். கோரிக்கை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் திருத்த அறிக்கையை தாக்கல் செய்வதன் மூலம் தகவல் திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.