கோடை குறுவை அறுவடை துவங்கிய நிலையில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க தமாகா விவசாயாஅணி கோரிக்கை

கோடை குறுவை அறுவடை துவங்கிய நிலையில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க தமாகா விவசாயாஅணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நவரை பட்டம் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தாங்கள் பயிரை அறுவடை செய்ய துவங்கும் சூழ்நிலையில் முன்னேற்பாடாக தமிழகஅரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்திட வேண்டும் தமிழகத்தில் கோடையில் ஆழ்துளை கிண்று, கிணறுகள் மூலம் நெல்சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடையை துவங்கியுள்ள சூழ்நிலையில் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் திறந்து கொள்முதல் செய்திட வேண்டும் மற்றும் ஒவ்வொறு கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான தார்பாய்களை அரசு வழங்கிட வேண்டும் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தாங்கள் நெல்மணிகளை சேதமின்றி பாதுகாத்திட தார்பாய்களை வழங்குவது அவசியம் எனவே தமிழகஅரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை விரைந்து திறந்து விவசாயிகளுக்கு உரிய தார்பாய்களை வழங்க வேண்டும்   என தமாகா விவசாயஅணி மாநில தலைவர் துவார் சி.ரெங்கராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.