உயிரிழந்த 10 பேருக்கு தலா ரூ.5லட்சம் காசோலை, ரூ.50,000 ரொக்கம் ஆலை சார்பில் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் இறந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனுக்கு போலீசார் வலைவீசி வந்தனர். இந்நிலையில் சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் குத்தகைதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5லட்சம் நிதி வழங்கியுள்ளது. உயிரிழந்த 10 பேருக்கு தலா ரூ.5லட்சம் காசோலை, ரூ.50,000 ரொக்கம் ஆலை சார்பில் வழங்கப்பட்டது.