அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்புகள்: முதல் அணியாக வெளியேறிய மும்பை

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் சுற்றோடு வெளியேறிய முதல் அணியாகி உள்ளது ஐந்து முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ். இந்தச் சூழலில் நடப்பு சீசனில் அடுத்த எஞ்சியுள்ள மற்ற 9 அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறித்து பார்ப்போம்.

முதல் சுற்றான லீக் சுற்றை பொறுத்தவரையில் இன்னும் 13 போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்தச் சூழலில் ஐபிஎல் அணிகளுக்கு இடையிலான பிளேஆஃப் வாய்ப்புக்கு ‘யார் முந்துவது’ என்ற ரேஸ் தீவிரமடைந்துள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு வலுவாக உள்ளது. மேற்கொண்டு ஒரு போட்டியில் வெல்லும் பட்சத்தில் இரண்டு அணிகளும் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

பிளேஆஃப் சுற்றுக்கு மொத்தமாக நான்கு அணிகள் மட்டுமே முன்னேற முடியும். கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் போக மீதம் இருப்பது இரண்டு இடங்கள் தான். அதனை உறுதி செய்ய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் உள்ளன.வ இதில் முன்னத்தி ஏர்களாக உள்ள சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற வாய்ப்பு அதிகம். இதை தவிர்த்து வேறு ஏதேனும் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமென்றால் அதிசயமும், அற்புதமும் நடந்தால் மட்டுமே அரங்கேற வாய்ப்புள்ளது.
புள்ளிகள் பட்டியல்: கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை, டெல்லி, லக்னோ, பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் ஆகிய அணிகள் 1 முதல் 10 இடங்களில் உள்ளன.