புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் நெய்கோணம் கிராமத்தில் கிராம புற மதிப்பீடு பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
இந்த செயல் விளக்கம் மதிப்பீடு பயிற்சி முகாமில் மதிப்பீட்டின் உள்ளடக்கங்களை எடுத்து காட்டாக கிராம வரைபடம், இடப்பெயர்ச்சி வரைபடம், பிரச்சனை மரம், பயிர்கால வரைபடம், வெண்படம், காலக்கோடு மற்றும் தினசரி வழக்கம், உள்ளிட்ட முக்கியமான 12 அம்சங்களுக்கு வரைபடம் மூலம் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
வேளாண் கல்லூரி மாணவிகளின் கிராம புற செயல் விளக்க பயிற்சி முகாமில் நெய்கோணம் கிராமத்தின் தலைவர் பெரியசாமி மற்றும் துணைத்தலைவர்,திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன் அக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.