4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 15ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட் 4-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கு மார்ச் 28 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்குகள் போன்று அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கடந்த ஆண்டு உயர்கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி கடந்த மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விண்ணப்பிதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த மார்ச் 14 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-9693451887247156&output=html&h=280&adk=3209511924&adf=1581524842&pi=t.aa~a.2710742366~i.1~rp.4&w=752&fwrn=4&fwrnh=100&lmt=1714201454&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1941324037&ad_type=text_image&format=752×280&url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Feducation%2F4000-assistant-professor-posts-application-deadline-extended&fwr=0&pra=3&rh=188&rw=752&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI0LjAuNjM2Ny42MSIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJDaHJvbWl1bSIsIjEyNC4wLjYzNjcuNjEiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMjQuMC42MzY3LjYxIl0sWyJOb3QtQS5CcmFuZCIsIjk5LjAuMC4wIl1dLDBd&dt=1714201445276&bpp=2&bdt=1335&idt=3&shv=r20240424&mjsv=m202404230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Da842eccc92d07727-22dcb04edce2008d%3AT%3D1690698009%3ART%3D1714201506%3AS%3DALNI_Mb1PAG1Xkk6tqjurdk5D5tFeMbm5Q&gpic=UID%3D00000c2555463488%3AT%3D1690698009%3ART%3D1714201506%3AS%3DALNI_Mawrh0Ob9WXJvSFgSMvQLTJuPo2AA&eo_id_str=ID%3D79ad44e5e6fa91da%3AT%3D1706611638%3ART%3D1714201506%3AS%3DAA-Afjaf8ALagGCJwShlf3QEE-b3&prev_fmts=0x0&nras=2&correlator=2535256126370&frm=20&pv=1&ga_vid=1633204430.1690697998&ga_sid=1714201445&ga_hid=265900596&ga_fc=1&u_tz=330&u_his=20&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=105&ady=2982&biw=1349&bih=607&scr_x=0&scr_y=558&eid=44759875%2C44759926%2C44759842%2C95328447%2C31083029%2C31083066%2C44798934%2C31082144%2C95331042%2C95331555%2C95331696%2C21065724%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=3439086310979137&tmod=601937304&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fstate&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C607&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=9&uci=a!9&btvi=1&fsb=1&dtd=8886 இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 29.04.2024 லிருந்து 15.05.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது’ என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டமும் அதோடு ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பி.எச்டி. முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.