நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் : அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி மனு

லஞ்ச வழக்கில் கைதாகி நிபந்தனை பிணையில் வெளிவந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அரசு மருத்துவமனை மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் கடந்த டிசம்பர் மாதம் 2023ல் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே பிணைக்கோரி அங்கித்திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், நீதிமன்றம் அவரை நிபந்தனை பிணையில் விடுவித்தது. மார்ச் 23ம் தேதி முதல் தினமும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற நிபந்தனைப்படி கையெழுத்திட சிரமமாக உள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அங்கித்திவாரி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு ஏப்ரல் 12ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.