புதுக்கோட்டையில் புதுகை வரலாறு 6ம் ஆண்டு கல்வி வழிகாட்டி உலக சாதனை

புதுக்கோட்டையில் புதுகை வரலாறு 6ம் ஆண்டு கல்வி வழிகாட்டி நேற்று தொடங்கி இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளில் முதன்மையான இடங்களை பிடித்து புதுகை வரலாறு முதலிடம் கல்வியாளர்கள் பெருமிதம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு குறிப்பாக தென் தமிழகத்தில் அதுவும் தென்னிந்தியாவில் உலக அளவில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளில் புதுகை வரலாறு நாளிதழ் நடத்திய உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியானது உலக சாதனை படைத்திருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை புதியபேருந்து நிலையம் அருகில் உள்ள விஜய் பேலஸில், உலகத்தரம் வாய்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற புதுகை வரலாறு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. விழாவிற்கு விஜய் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முருகானந்தம், கேஎம்எஸ் ஹக்கீம் பிரியாணி நிர்வாக இயக்குனர் சையது இப்ராஹிம், ஸ்ரீ புவனேஸ்வரி தங்க மாளிகையின் நிர்வாக இயக்குனர் எஸ்.நடராஜன், முத்து மீனாட்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் பெரியசாமி, பேக்கரி மஹாராஜ் நிர்வாக இயக்குனர் அருண்ராஜ் சின்னப்பா, குளோபல் பவுண்டேஷன் இயக்குனர் ராஜேஷ்கண்ணா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

தேசிய நல்லாசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்து கொண்டு பேசியது, முதலில், இவ்வளவு பெற்றோர்கள் காலையிலேயே வந்துள்ளது. மகிழ்ச்சியை அளிக்கிறது. பள்ளி வாழ்க்கையை முடித்துள்ள, மாணவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன படிக்க வேண்டும் என்கிற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு பெண்மணியை சந்தித்தேன். உங்க பொண்ணு என்ன பண்றாங்க அப்படின்னு கேட்டேன்‌, +2 படிக்கிறாங்க. வேற எதாவது கோர்ஸ் பண்றாங்களா? சனி, ஞாயிறு திருச்சிக்கு போயிட்டு வர்றாங்க ஏன் திருச்சிக்கு போறாங்க என்று கேட்டேன். 75,000 பணம் கட்டி கோச்சிங் கிளாஸ் சேர்த்து விட்டிருக்கிறேன் என்று சொன்னார் அந்த பெண்மணி. இந்த சம்பவத்தை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றால், பல பெற்றோர்களுக்கு அறியாமை இன்னும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளேன். அனைத்து துறைகளிலும், பல வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் நான் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவற்றை நோக்கியே என்னுடைய படிப்பு இருக்கும் என்று பல மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதற்குத் தகுந்தாற்போல், அதே ஊதியத்தில் பல்வேறு பதவிகள் இருக்கின்றன. அது போன்ற துறைகளை யாரும் தேர்வு செய்வது கிடையாது என நினைக்கிறேன்.

இப்போது வெளிவந்துள்ள திரைப்படத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறோம். ஆனால் கல்வி சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. ஆகவே, பெற்றோர்களுக்கு நான் சொல்வது ஒரே ஒரு அறிவுரை தான் உங்களுடைய மாணவர்களை இங்கேவந்துள்ள கல்வி நிறுவனங்களில் சேர்க்கிறீர்களோ, இல்லையோ ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுச் செல்லுங்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர், பெருமக்கள் கலந்து கொண்டு கூறுகையில்:- உலக அளவில் நாங்களும் பல்வேறு நிறுவனங்களின் வழிகாட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளோம். ஆனால் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வு புதுகை வரலாறு நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டுள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுகின்றது. ஏராளமான மாணவர்கள் வருகையை பார்க்கும் பொழுது இது உலக சாதனையான நிகழ்ச்சியாகவே தாங்கள் கருதுவதாக அவர்கள் மன மகிழ்ந்து தெரிவித்தனர்.

இன்று இரண்டாவது நாளான இன்றும் இந்த நிகழ்வு தொடர்கின்றது. மாணவச்செல்வங்கள் அனைவரையும் வரவேற்று காத்துள்ளது புதுகைவரலாறு. இதில் சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 கல்வி நிறுவனங்கள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக புதுகை வரலாறு ஆசிரியர் சிவசக்திலேல் அறிமுக உரையாற்றினார், ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.