கேஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரி மனு ள் விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்க உத்தரவிடக் கோரி, தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அவரே முதல்வராக தொடருவார் என ஆம் ஆத்மி அறிவித்தது. ஆனால், சிறையிலிருந்து ஆட்சியை நடத்துவதா என கண்டனம் தெரிவித்த, அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக, கேஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தி போராட்டமும் நடத்தியது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-9693451887247156&output=html&h=280&adk=3209511924&adf=2990182141&pi=t.aa~a.541443~i.1~rp.4&w=752&fwrn=4&fwrnh=100&lmt=1712217345&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1941324037&ad_type=text_image&format=752×280&url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fpolitics%2Fdelhi-hc-refuses-to-entertain-pil-to-remove-arvind-kejriwal-as-chief-minister&fwr=0&pra=3&rh=188&rw=752&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTIzLjAuNjMxMi44OCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTIzLjAuNjMxMi44OCJdLFsiTm90OkEtQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyMy4wLjYzMTIuODgiXV0sMF0.&dt=1712217345857&bpp=2&bdt=1164&idt=2&shv=r20240402&mjsv=m202403280101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Da842eccc92d07727-22dcb04edce2008d%3AT%3D1690698009%3ART%3D1712217335%3AS%3DALNI_Mb1PAG1Xkk6tqjurdk5D5tFeMbm5Q&gpic=UID%3D00000c2555463488%3AT%3D1690698009%3ART%3D1712217335%3AS%3DALNI_Mawrh0Ob9WXJvSFgSMvQLTJuPo2AA&eo_id_str=ID%3D79ad44e5e6fa91da%3AT%3D1706611638%3ART%3D1712217335%3AS%3DAA-Afjaf8ALagGCJwShlf3QEE-b3&prev_fmts=0x0&nras=2&correlator=1155981118770&frm=20&pv=1&ga_vid=1633204430.1690697998&ga_sid=1712217346&ga_hid=79656578&ga_fc=1&u_tz=330&u_his=8&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=105&ady=2457&biw=1349&bih=607&scr_x=0&scr_y=242&eid=44759875%2C44759926%2C44759842%2C31082301%2C95326315%2C31082370%2C95320376%2C31082143%2C95321868%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=1427462400788636&tmod=1280260442&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fnational&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C607&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=9&uci=a!9&btvi=1&fsb=1&dtd=19 அமலாக்கத் துறை விசாரணை காவலில் இருந்தபோது, டெல்லி அரசுக்கு கேஜ்ரிவால் இரு உத்தரவுகளை பிறப்பித்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேஜ்ரிவால் குற்ற வழக்கை எதிர்கொள்வதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பிரிதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சில சமயங்களில், தனிப்பட்ட நலன் தேசிய நலனுக்குக் கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், அது அவருடைய (கேஜ்ரிவால்) தனிப்பட்ட முடிவு. மனுதாரருக்கான தீர்வு துணை நிலை ஆளுநர் அல்லது இந்திய குடியரசுத் தலைவர் முன் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்களை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது” என கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.

முன்னதாக கடந்த மார்ச் 28-ம் தேதி அன்று, சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.