தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜகவின் கூட்டணி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மதுரை வருகிறார். தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டும் அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
இதற்கிடையே, தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம் செய்ய உள்ளார். ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமித் ஷா வாகன பேரணி மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை வாகன பேரணி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.