புதுகை வரலாறு நாளிதழ் நடத்தும் ஆறாம் ஆண்டு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஏப்ரல் மாதம் 6 & 7 முதல் (சனி, ஞாயிறு) அன்று நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
புதுக்கோட்டையில் பேருந்துநிலையம் அருகில் உள்ள விஜய் பேலஸில் புதுகை வரலாறு நடத்தும் கல்வி வழிகாட்டி- 2024 ஏப்ரல் 6 & 7 (சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுகிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் மருத்துவம். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விலகும் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் அனுபம் மிக்க கல்வியியல் ஆலோசகர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகளை அளிக்க இருக்கிறார்கள்.
அடுத்ததாக என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்பது +2 முடித்த அனைத்து மாணவ- மாணவியர்களின் மனதில் இருக்கும் கேள்வியாகும். வழக்கமான மருத்துவம். பொறியியல் ஆகிய படிப்புகளை தாண்டி நூற்றுக்கணக்கான மற்ற படிப்புகள் இப்போது இருக்கின்றன. அவற்றை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நல்ல எதிர்காலமும் இருக்கிறது என்பதை கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கல்வி வழிகாட்டியில் மருத்துவம், பொறியியல், விவசாயம், கலை மற்றும் அறிவியல், கேட்டரிங் மற்றும் இதர உயர் கல்வி துறைகள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் உயர்கல்வி திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
பிரபல கல்வி ஆலோசகர்கள் காரைக்குடி. அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், முனைவர்.எஸ்.சுப்பையா, தேசிய நல்லாசிரியர் விருதாளர். கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோரும் கல்வி வழிகாட்டியில் கலந்துக்கொள்ளும், மாணவ-மாணவிகளுக்கு எழும் உயர்கல்வி சார்ந்த சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு படிப்பிலும் இருக்க கூடிய பாடத்திட்டங்கள், அதற்குரிய தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
அதிகமான வேலை வாய்ப்புகள் கொண்ட பொறியியல் படிப்புகள், மரைன் மற்றும் ஏரோ நாட்டிகல் பொறியியல் கல்வியில் உள்ள சர்வதேச வாய்ப்புகள், கேட்டரிங் படிப்புகள் மற்றும் நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவை பற்றி வல்லுநர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். மேலும் மாணவர் சேர்க்கை நடை முறைகள் கட்டண விவரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை விவரங்கள் போன்றவற்றையும் அரங்கத்தில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, சமீப காலங்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற துறைகளாக பத்திரிகை, தொலைக்காட்சி, விளம்பரத்துறை, டிஜிட்டல் மீடியா சோசியல் மீடியா, உளவியல், சுற்றுலா, இசை, நடனம், இந்தியா கலாச்சாரம், சத்துணவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இருக்கின்றன. அந்த துறைகளில் உள்ள பட்டப்படிப்புகளில் எவற்றை தேர்ந்தெடுத்தால் எளிதாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இங்கு கல்வியாளர்கள் அளிக்க இருக்கிறார்கள்.
இக்கண்காட்சியில் பங்கேற்கும் கல்வி நிலையங்கள், தங்கள் கல்லூரியில் உள்ள சிறப்பம்சங்கள், பயிற்றுவிக்கப்படும் படிப்புகள் ஆகியவை பற்றிய தகவல்களை அளிக்க உள்ளன. எனவே மாணவர்கள் தங்கள் உயர் கல்வி குறித்த அனைத்து விவரங்களையும் இங்கு பெற முடியும். கல்லூரி அட்மிஷன் நடைமுறைகள் மற்றும் கட்டண விவரங்களையும் அரங்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு படிப்பிலும் சேர்வதற்கு பிளஸ்-2 வில் என்ன பாடத்தை படித்திருக்க வேண்டும் என்பது போன்ற கல்வி தகுதிகள் பற்றியும், கல்வி கற்கும் காலத்தில் கிடைக்கும் கல்வி உதவித்தொகை பற்றியும் இக்கண்காட்சியில் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான உதவித்தொகைகள், கட்டண சலுகைகள் போன்ற விவரங்களையும், அதற்கான தகுதிகள் பற்றிய விளக்கம் பெறுவதற்கு இந்த நிகழ்வானது உதவியாக இருக்கும்.
காலத்திக்கேற்ப ஒவ்வொரு துறையிலும் அறிமுகமாகி வரும் புதிய படிப்புகள், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி புதுகை வரலாறு கல்வி வழிகாட்டி மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் பற்றியும், வெளிநாட்டில் படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் உடனடி வேலை வாய்ப்புகள் கொண்ட படிப்புகள் பற்றி அறிந்து அவற்றை அருகில் உள்ள கல்வி நிறுவனத்திலேயே பெறுவதற்கும் இந்த கண்காட்சி நல்ல வாய்ப்பாக அமையும். காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
இவ்விழாவை இணைந்து நடத்துவோர்: எஸ் ஆர் புளு மெட்டல்ஸ், சிஎஸ்கே குளோபல் பவுண்டேஷன், பேக்கரி மஹராஜ், முத்துமீனாட்சி மருத்துவமனை, விஜய் நிறுவனங்கள், ஸ்ரீ புவனேஸ்வரி தங்க மாளிகை, கேஎம்எஸ் ஹக்கீம் பிரியாணி.
மேலும் விபரங்களுக்கு:98420 98534,63833 51422,88381 73645,97154 54081 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெறும் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பேராசிரியர் க.கிருஷ்ணமூர்த்தி தரும் விளக்கம் இதோ; தங்களின் பிள்ளைகளை தரமான உயர் கல்வியில் சேர்க்க வேண்டும் என்ற ஆவலில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களுக்கு பயணித்து கோடை வெயிலில் சிக்கி தவித்து சின்ன பின்னமாகி வாகன விபத்துகளுக்கும் ஆளாகி அங்கிருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் வாசற்படியை 10 நாட்களுக்கு மேலாக ஏறி இறங்கி சிறுக சிறுக சேமித்த பணத்தினை விரையம் செய்யுபவர் எப்படி புத்திசாலியாக இருப்பார். நல்ல மனிதர்கள் ஒன்று கூடி முன்னெடுக்கும் கல்வித் திருவிழா உலக அளவில் புதுக்கோட்டையை சார்ந்தோர் கோலோச்சிட புதுகை வரலாறு முன்னெடுப்பில் ஆண்டுதோறும் புதுக்கோட்டையில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து ஜாம்பவான்களும் புதுக்கோட்டைக்கு வருகிறார்கள் அப்படி இருக்கையில் நாம் ஏன் அவர்களை தேடி செல்ல வேண்டும்? நம் புதுக்கோட்டைக்கு வரும் இவர்களை பெற்றோர் அவர்கள் இடத்திற்கு சென்று பார்க்க போனால் 2500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் குறைந்த பட்சம் ஒரு நபர் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகும் அந்த பணத்தை முதல் ஆண்டு கல்வி கட்டணத்தில் செலுத்தி விடலாம் என்பதை பெரும்பாலான மறந்து விடுகின்றனர் என்றார்.