கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பள்ளி மாணவன் பலி உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அம்மானிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் முகேஷ் கண்ணன் (வயது 15) இவர் அம்புகோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அம்புக்கோவில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அம்மானிப்பட்டு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் முகேஷ் கண்ணன் ஒட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகேஷ் கண்ணன் படுகாயமடைந்தார். இதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் கண்ணன் நேற்று இறந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே பள்ளி மாணவன் முகேஷ் கண்ணன் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கண்டுபிடிக்க பலன் இன்றி முகேஷ் கண்ணன் நேற்று இறந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே பள்ளி மாணவன் முகேஷ் கண்ணன் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க கோரி மாணவனின் உறவினர்கள் அம்மானிப்பட்டில் கறம்பக்குடி தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்ட் பவுல்ராஜ் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ் ஆங்கிலம் என இரண்டு பொது தேர்வுகள் எழுதிய நிலையில் பத்தாம் வகுப்பு மாணவன் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.