அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு உற்சாக வரவேற்பு

திருச்சி மக்களவைத் தொகுதியில்  அதிமுக சார்பில் போட்டியிடும்  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக  பாசறை செயலாளர்  ப.கருப்பையா  தொகுதி வாரியாக  நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வில்  கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி கீரனூர் பேரூராட்சி  குன்னாணடார்கோவில் கிழக்கு, மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகளை  சந்தித்தார்.  அப்போது  ஒன்றியச்செயலாளர் கூகூர் பாலு  ஏற்பாட்டில்  வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த நிகழ்வில்  முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம்  மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டு வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.