மதுரை, பாண்டிகோவில் அருகே துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்காக கனிமொழி எம்.பி. தலைமை கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2024 பாராளுமன்ற தேர்தலுக்கான கோரிக்கை மனுவை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எம்.பி.-யிடமும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனிடமும் கொடுத்து ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பரிசீலனை செய்வதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தக அணி துணைத்தலைவர் கோவிச்செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன், மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ. மற்றும் சேடப்பட்டி மணிமாறன், கம்பம் ராமகிருஷ்ணன், மதுரை மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ. பூமிநாதன், வெங்கடேசன், தமிழரசி, மாமன்ற குழு தலைவர் ஜெயராம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, எழுபதாவது வட்ட கழகச் செயலாளர் பாலசிவக்குமார், இளங்கோ மற்றும் முத்துராமன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர், உசிலை சிவா ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.