புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பெரிய நாயகி அம்பாள் உடன் உரை அரங்குலநாதர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று. மூலஸ்தானத்தில் உள்ள சுயம்புலிங்க சிவபெருமான் பெரியநாயகி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருள செய்து சிவ பக்தர்கள் சிவ சிவ ஹர ஹர ஹரத்துடன் மூன்று முறை பிரகார உலா வந்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நந்தி பகவானுக்கு மகா தீபம் காட்டினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் காசிக்கு வீசும் கூட என்று அழைக்கப்படும் திருவிடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கலநாயகி அம்பாள் கோவில், திருமலைராயசமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கதிர்காமேஸ்வரி அம்பாள் கோவில், பாலையூர் பழங்கரை புராதனீஸ்வரர் கோவில், விஜயரகுநாதபுரம் சிவன் கோவில் ஆகிய இடங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.