ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, உடையார்பாளையம் பேரூராட்சியில், வார்டு எண்-2 ல் செக்கான்குட்டையில், அம்ரூத் 2.O திட்டத்தின் கீழ், ரூபாய் 42.00 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி, உடையார்பாளையம் வடக்கு ஆதிதிராவிடர் காலனியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், சமுதாயக் கூடத்திற்கு ரூபாய் 8.75 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி. உடையார்பாளையம் பள்ளிவாசல் மயானத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், ரூபாய் 7.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி, உடையார்பாளையம் வார்டு எண்-10ல் கைக்களநாட்டார் தெருவில், அம்ரூத் 2.O திட்டத்தின் கீழ், ரூபாய் 32.00 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி, உடையார்பாளையம்-ஜெயங்கொண்டம் மெயின் ரோடு அருகில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், ரூபாய் 14.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணி ஆகிய பணிகளை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  தொடங்கிவைத்தார்.

மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுச்சாவடி அருகில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமையவிருக்கும் இடத்தில், கட்டுமான பணி தொடங்க, அரசு அலுவலர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  ஆலோசனை செய்தார். உடையார்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய  செயலாளர் தன.சேகர், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், துணை தலைவர் அக்பர் அலி, செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர் குணசேகரன், பேரூர் கழக செயலாளர் வெ.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம்.ஷாஜஹான், பேரூராட்சி உறுப்பினர்கள் சங்கர், அன்னக்கிளி, பிரபு, அன்பழகன், ராதிகா ராயர், கஸ்தூரி சேதுரத்தினம், ராதாகிருஷ்ணன், பேரூர் கழக நிர்வாகிகள் ஜெகநாதன், ராயர், துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராணி சின்னதுரை, தங்கராசு, விசிக பேரூர் கழக செயலாளர் ஜெயக்குமார் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரமேஷ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக், காண்ட்ராக்டர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.