மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத் சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும் புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வகன திருத்தச் சட்டத்தினால் அதீதமான தண்டனைகள், ஆன்லை அபராதம், வாகனவரி உயர்பு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு என மோட்டார் தொழிலில் உள்ளவர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே, மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், அதீதத் தண்டனைகள், அபராதம், கட்டண உயர்வுகளைத் திரும்பப்பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டப் பொதுச் செயலாளர் க.ரெத்தினவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா பேசினார். மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர் பங்கேற்றனர்.