ஆண்டிமடத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு விழா

ஆண்டிமடத்தில் லயன் சங்க மண்டல சந்திப்பு விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் – கவரப்பாளையத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், எழில் மொழி மண்டல சந்திப்பு விழா நடைபெற்றது. மண்டலத் தலைவர் ராஜேந்திரன்  தலைமையில் நடைபெற்ற, விழாவில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் லயன் சங்க மாவட்ட ஆளுநர் இமயவரம்பன்,  சிறப்பு விருந்தினர்கள்  டாக்டர் ஆர்த்தி, சீனிவாசன்,  மற்றும் பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.