புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல், அரிமளம் ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டர்.
அரிமளம் ஊராட்சி ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிதியில் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை பார்வையிட்டார். அங்கன்வாடி கட்டிடத்தின் கட்டுமான பணி தரத்தை ஆய்வு செய்தார். சரியான அளவில் கட்டிடம் கட்டப்படுகின்றதா கட்டிடத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றப்படுகிறது ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓணாங்குடி ஊராட்சி மரமடக்கி 12 கி.மீ தார்சாலை ரூபாய் 57.26 லட்சம் மதிப்பில் போடப்படுவதை பார்வையிட்டார். பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். சத்திரம் கிராமத்தில் ரூபாய் 36 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் தார் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவகளுடன் கலந்துரையாடினார். ஊராட்சியில் காலதாமதமாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். பணிகள் தாமதமாக நடைபெறுவதற்கு காரணம் என்ன ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களிடம் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஒன்றிய குழு தலைவர் மேகலாமுத்து, உதவி செயற்பொறியாளர் அல்லி, கணக்கு அலுவலர் கண்ணன், ஆணையர் சிங்காரவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணராஜா, ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார், இளநிலை பொறியாளர் அகிலாண்டம் , ஊராட்சி மன்ற தலைவர்கள் கடியாபட்டி உமாமகேஸ்வரி சோமசுந்தரம், ஓணாங்குடி முருகேசன், திருவாக்குடி கலாகருப்பையா, ஏம்பல் கனிமொழி முருகானந்தம் , இரும்பாநாடு முத்து, உள்ளிட்ட ஊராட்சி செயலாளர், அரசு ஒப்பந்தக்காரர்கள், ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.