தென்காசி மாவட்டம், குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் திருமண நிதி உதவி திட்டம் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ. 1.53 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவி தொகைக் காண காசோலை வழங்கினார், மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.காமல் கிஷோர் தலைமையில், தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஈஸ்வரன், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளி படிப்பு ரூ. 25,000 நிதியும், 8 கிராம் தங்க நாணயமும், பட்டப் படிப்புக்கு ரூ. 50,000, 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. அதேபோல் அன்னை தெரசா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி ரூ. 25,000 நிதி உதவியில் ரூ. 15,000 மின்னணு மூலமாகவும், ரூ. 10,000ம் தேசிய சேமிப்பு சான்றிதழ்களாகவும், 8 கிராம் தங்கம் நாணயத்துடன் வழங்கப்பட்டது. ஈவேரா மணியம்மை விதவை மகள் திட்டத்தில் 316 பயனாளிகளுக்கும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமண திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கும், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கும், ஆக மொத்த 394 ஏழை பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 3,152 கிராம் தங்க நாணயம், 19,394.256 மதிப்பீட்டிலும், ரூ. 1,53,25000 நிதியுதவி வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன், மாவட்ட வருவாய் துறை அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவி திவ்யா மணிகண்டன், ஜெயராணி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.