தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் சையது அப்துல்லா கலீஃபா தர்காவிற்கு சொந்தமான கடைகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு பொதுவுடமை அதிகாரி உத்தரவின் படி வக்பு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடையநல்லூரில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான தெற்கு அய்யாபுரம் தெருவில் தங்கள் கட்சிக்கு பாத்தியப்பட்ட 2011- சையது அப்துல்லா கலிபா சாஹிப் தர்கா உள்ளது. இந்த தர்காவை தங்கள் கட்சி ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் பராமரித்து வந்தனர். இதை நிர்வகிப்பதில் இரு பிரிவுகளாக செயல்பட்டதால் 2011ம் ஆண்டு இவர்களுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனி பிரிவுகளாக செயல்பட்டனர்.
இந்த தர்காவிற்கு திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. வக்பு வாரியம் நியமித்த முத்தவல்லியான டாக்டர் மஜித் என்பவரிடம் வாடகை செலுத்தாததால் 2011ம் ஆண்டு முதல் இன்று வரை வக்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட முத்தவல்லி மஜீத்திடம் கடையின் வாடகையை வழங்க வலியுறுத்தி சென்னை வக்பு வாரிய பொது உடைமை அதிகாரி முன்னிலையில் விசாரணை செய்ததில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகையை வழங்காத கடைகளை சீல் வைத்து கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்தனர்.
அதனடிப்படையில் 1 மாதம் அவகாசம் வழங்கியும் வாடகை வழங்காமலும், கடையை காலி செய்யாமல் இருந்ததால் 10 கடைகளையும் இன்று திருநெல்வேலி வக்பு வாரிய கண்காணிப்பாளர் அப்துல்வகாப், ஆய்வாளர்கள் செய்யது ரிஜா, ஷேக்அப்துல்லா, பர்கத்துல்லா, கடையநல்லூர் காவல் இன்ஸ்பெக்டர் ராஜா, விஏஓ ராமச்சந்திரன் தலைமையில் வக்பு அதிகாரிகள் அனைத்து கடைகளையும் பூட்டி சீல் வைத்து தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.