தத்தனூர் எம்.ஆர். கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டம், எம்.ஆர். கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்துள்ள, தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில்  கம்ப்யூட்டர் விஷன் பார் ஏஐ அண்ட் மெஷின் லேனிங்  என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் தலைமை தாங்கினார். இயக்குநர் முனைவர் ஆர்.இராஜமாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் முனைவர்   ப.சங்கீதா  முன்னிலை வகித்தார். கணினி துறைத்தலைவர் எஸ்.பாலமுருகன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் பேசுகையில் புதிதாக வளர்கின்ற   செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மற்றும் இயந்திர கற்றலின்  முக்கிய நோக்கத்தைப் பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பல கருத்துக்களை கூறினார்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் மாஸ் கல்லூரி கணினித்துறை பேராசிரியர் முனைவர் க.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் புதிதாக வளர்கின்ற தொழில்நுட்பங்களையும் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது நிரவை மனிதனைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்கும் திறனை உருவாக்குவதற்கான ஒரு வழியாகும். இயந்திர கற்றலின் முக்கிய நோக்கம், இயந்திரங்கள் தரவுகளிலிருந்து  வடிவங்கள் மற்றும் விதிகளைக்  கற்றுக் கொள்வது, இதனால் அவை முடிவுகளை எடுக்கவும் புதிய தரவுகளில் செயல்படவும் முடியும். அதாவது அவை முடிவுகளை எடுப்பது, தரவை பகுப்பாய்வு செய்தல் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதாகும் என்று பல கருத்துக்களை கூறினார். முடிவில் பேராசிரியர் க.அபிராமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும்  பேராசிரியைகள் செய்திருந்தனர்.