சங்கரன்கோவிலில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சுப்பையா தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் பிரகாஷ், நகர அவை தலைவர் முப்பிடாதி முன்னிலை வகித்தனர். ஆசிரியை பொன் மேகலா வரவேற்றார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி பேசியதாவது, தமிழக முதல்வர் கல்வி துறையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, பள்ளி மேலாண்மை குழு, மாணவ, மாணவியர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், காலை உணவு திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயல்படுத்தி வருகின்றனர். மாணவிகள் கல்வியில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் கல்வி மற்றும்  தங்கள்  தனித்திறமைகள், விளையாட்டு போன்றவற்றிலும் ஈடுபட்டு செயல்பட வேண்டும், தற்பொழுது சங்கரன்கோவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்று கோடி செலவில் புதிய மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. அதில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நேரம் ஒதுக்கி  அவர்கள் தங்கள் உடல் திறனை வலுப்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும். மாணவிகள் தமிழக முதல்வர் கல்வியில் செயல் படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமென பேசினார்.

தொடர்ந்து இந்த பள்ளியைச் சேர்ந்த  மாவட்ட அளவில் கட்டுரை போட்டியில் 2ம் இடம் பிடித்த மாணவி மனிஷா மற்றும் மாநில அளவில் ஹார்மோனியம் வாசிக்கும் போட்டியில் 2ம் இடம் பிடித்த செல்வி சக்திமீனாட்சிதேவி ஆகிய மாணவிகளை பாராட்டி புத்தகங்கள் வழங்கினார். இதில் திமுக நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர்கள் பாட்டத்தூர் ராமலிங்கம், பழனிச்சாமி, வீராசாமி, சதீஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைச்செல்வி, உறுப்பினர் செல்வின் மற்றும் ஜான், காவல் கிளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.