அரியலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்

அரியலூரில் ஆதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அருகே, திருநருங்குன்றம் கிராமத்தை சேர்ந்த, பட்டியல் இன பெண்ணை, வன்கொடுமை செய்த, பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, தமிழக அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி அரியலூர் தாலுகா அலுவலகம் எதிரே, அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொரடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். அதிமுக மாவட்ட அவை தலைவரும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் இளவரசன் உள்ளிட்டோர் பேசினார்கள். அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், செங்கமலை, பரமசிவம், எம்ஜிஆர் மன்ற மாநில நிர்வாகி அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், வக்கீல் சங்க நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, ராமகோவிந்தராஜன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சிவஞானம், ஆண்டிமடம் சேர்மன் மருதமுத்து, ஒன்றிய செயலாளர்கள் பொய்யூர் பாலசுப்ரமணியன், அரியலூர் செல்வராஜ், ஜெயங்கொண்டம் கல்யாணசுந்தரம், ஆண்டிமடம் ராமச்சந்திரன், தா.பழுர் வக்கீல் அசோகன், திருமானூர் வடிவழகன், ஆண்டிமடம் ரீடு செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.