LATEST ARTICLES

ஆப்கானில் அந்நியச் செலாவணியை தங்களது தேவைக்காக பயன்படுத்த தடை : மீறினால் வழக்கு தொடரப்படும் – தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானில் அந்நியச் செலாவணியை தங்களது தேவைக்காக பயன்படுத்த தடை விதிப்பதாகவும், மீறினால் வழக்கு தொடரப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், தற்காலிக அரசை அமைத்து...

உளுந்தூர்பேட்டை : போலி பதிவெண் பொருத்தி மது பாட்டில்கள் கடத்திய கார் மற்றும் 1,134 மது பாட்டில்கள் பறிமுதல்...

உளுந்தூர்பேட்டை அருகே போலியான பதிவெண் பொருத்தி மது பாட்டில்கள் கடத்திய கார் மற்றும் 1,134 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு...

மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வானதன் மூலம் அதிமுக சார்பாக, மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற...

கைவினை நல இளைஞர்களின் நலனுக்காக ரூ.51 கோடி மதிப்பில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் – அமைச்சர்...

கைவினை நல இளைஞர்களின் நலனுக்காக ரூ.51 கோடி மதிப்பில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி...

இந்தியாவில் நாள்தோறும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் –...

இந்தியாவில் நாள்தோறும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இமாசல பிரதேச சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி பயனாளர்களிடம்...

கொரோனா : 3வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழகத்தில் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா 3வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-மத்திய அரசின் வழி காட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு குழு...

ஆசிரியர்களுக்கான இணைய வழி கணினி பயிற்சியில் ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் : சாமி.சத்தியமூர்த்தி தகவல்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2021-22ம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர  5 நாட்கள் பயிற்சி...

பால் உற்பத்தியாளர்களிடம் கூட்டுறவு சங்கங்கள் நெய் வாங்க வற்புறுத்த கூடாது : விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

பால் உற்பத்தியாளர்களிடம் நெய் வாங்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்த கூடாது என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் அதன் நிறுவனர்...

கோவை : கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலி – வாளையாறு எல்லையில் மாவட்ட கலெக்டர் சமீரண் ஆய்வு

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியால் கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட கலெக்டர் சமீரண் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக -...

கறம்பக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாப பலி

கறம்பக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 போ் படுகாயமடைந்தனா். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்தவர் மதியரசன்(27). இவருக்கு திருமணமாகி 45...

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஜல்லி எளிமையாக கிடைக்க செய்ய வேண்டும் – தமிழக...

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அகில இந்திய கட்டுனர் சங்கம் தஞ்சை மைய கட்டடத்தில் தமிழ் மாநில நெடுஞ்சாலை குழு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் குழு சார்பில் தலைவர் எம்.அய்யப்பன் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம்...

மயிலாடுதுறை : முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் மீது பெரம்பூர் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் மீது பெரம்பூர் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் பவுன்ராஜ். இவர் பூம்புகார் தொகுதியில் 2...

புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெளிநாடு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிராண்ட்ஸ் என்ற அமைப்பும் ரோட்டரி சங்கங்களும்...

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : சட்டசபையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்ட  அறிவிப்பில் கூறியதாவது:- இந்தியா முழுவதும் சமூக...

மதுரையில் ரூ.69 லட்சம் மதிப்பில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் – 8 பேர்...

மதுரையில் வாகன சோதனையில் ரூ.69 லட்சம் மதிப்பில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.15 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 45.81 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.15 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.81 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்...

தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இலவசம் : உள்ளிருப்பு போரட்டத்தில் இறங்கிய பழனி மொட்டை அடிக்கும் ஊழியர்கள்

பழனி முருகன் கோவிலில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் (சரவணப்பொய்கை) தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் வளாகத்தில் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் முடி எடுக்க...

டெல்லியில் இளம் பெண் காவல்துறை அதிகாரி கூட்டு வன்கொடுமை : நீதி கிடைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

டெல்லியில் இளம் பெண் காவல்துறை அதிகாரி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சங்கம் விகார் பகுதியில் கூட்டுகுடும்பத்துடன் வசித்து வந்த 21 வயதான...

டோக்கியோ பாராலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்தியா : 19 பதக்கங்களை வென்று 24வது இடம் பிடித்து சாதனை

டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்று திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆக.24ம் தேதி துவங்கியது. இதில்...

நாமக்கல் : ஆஞ்சநேயர்கோயில் குடமுழுக்கு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த அரசுக்கு பக்தர்கள் நன்றி

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் இணை கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பக்த சபாக்கள் மற்றும் திமுக நகர பிரமுகர் டி.டி.சரவணன் உட்பட பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற...

தரங்கம்பாடி : சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் – 6 மாவட்ட...

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண  மண்டபத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களை...

நாமக்கல் : பொதுமக்கள் சார்பில் 2000 பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்

நாமக்கல் அருகே பொதுமக்கள் சார்பில் ஏரிக்கரையில் பனை விதை விதைக்கும் பணி இன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் எஸ்.வாழவந்தி ஏரிக்கரையில் நேற்று சின்னகரசப்பாளையம் ஊர் பொது மக்கள் மற்றும் மாணவர் மன்றத்தார்...

கறம்பக்குடியிலிருந்து புதிய பேருந்து வழத்தடங்கள் : எம்எல்ஏ எம்.சின்னத்துரை தொடங்கி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து இரண்டு பேருந்து வழித்தடங்களை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை இன்று தொடங்கி வைத்தார். கறம்பக்குடியிலிருந்து பிலாவிடுதி, செவ்வாய்ப்பட்டி வழியாக பட்டுக்கோட்டைக்கும், கறம்பக்குடியிலிருந்து அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, கறம்பவிடுதி, மணமடை, கிளாங்காடு,...

கவிராசன் அறக்கட்டளை நடத்திய “நட்சத்திர ஆசிரியர்” விருதுகள் வழங்கும் விழா

கவிராசன் அறக்கட்டளை நடத்திய "நட்சத்திர ஆசிரியர்" விருதுகள் வழங்கும் விழா மற்றும் "புதுமைப் புதையல்" நூல் வெளியீட்டு விழா, புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரங்கத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற தேசிய...

புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கு விரைவாக கோவிட் 19 தடுப்பூசி செலுத்த ஏதுவாக ஏற்கனவே...

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல பேரிடம் கைவரிசை காட்டி வந்த பலே திருடன் கைது

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல பேரிடம் கைவரிசை காட்டி வந்த பலே திருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல மாதங்களாக ஏடிஎம் வளாகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை...

பஞ்சு மீதான 1% வரி நீக்கம் : தமிழகத்தில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் – தென்னிந்திய...

பஞ்சு மீதான 1% வரி நீக்கத்தால் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,...

ஆசிரியர் தினத்தையொட்டி இணையம் வழியாக ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொன்ன பள்ளி மாணவர்கள்

ஆசிரியர் தினத்தையொட்டி இணையம் வழியாக ஆசிரியர்களுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வாழ்த்து கூறினர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில்...

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை சங்க தலைவர் துரை மணி தலைமை தாங்கினார். தங்கம்மூர்த்தி முன்னிலை வகித்தார்....

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 45.74 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.74 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்...

கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு

கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கைகள்...

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியில் இறந்தவரின் உடலை சாலையின் நடுவே வைத்து நீதி வேண்டி போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பழனிச்சாமி என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி...

கறம்பக்குடி அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் – போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கறம்பக்குடி திருமணஞ்சேரி விலக்கு சாலையில் உள்ள அரசு சார்நிலை...

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார்...

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். திருவள்ளூரை அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(40)....

நாமக்கல் : மூளைச்சாவால் உயிரிழந்த திமுக பிரமுகரின் மகன் – 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு நன்றி...

நாமக்கல்லில் மூளைச்சாவால் உயிரிழந்த திமுக பிரமுகர் மகனின் 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு நன்றி நவிழும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு நகரத்தின் பொறுப்பு குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி...

மஜக சார்பில் கல்வி உதவி தொகை இலவச பதிவு முகாம்

மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பதிவு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மனிதநேய ஜனநாயக கட்சி மணமேல்குடி ஒன்றியம் சார்பில் கோட்டைப்பட்டிணம் செக்போஸ்ட் அருகில் சிறுபான்மையினர் கல்வி உதவி...

பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழனின் பொக்கிசமாகத் திகழும் பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொய்வின்றித் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப்...

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க மஜக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மஜக மாவட்டசெயலாளா் முகமது ஜான் விடுத்துள்ள கோரிகையில், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது...

புதுக்கோட்டை : அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – முதன்மைக்கல்வி அலுவலர்...

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  கடந்த 1ம் தேதி...

பட்டுக்கோட்டையில் 7 வயது சிறுவன் 1 மணி நேரத்தில் 18.4 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், சங்கீதா தம்பதியின் 7 வயது மகன் 2ம் வகுப்பு படிக்கும் நலன்ராஜன்  உலக சாதனைக்காகவும், கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காகவும் சாலையில் 1...

அறந்தாங்கி வட்டார விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை கண்டுணர்வு பயணம்

அறந்தாங்கி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் அறந்தாங்கி வட்டார விவசாயிகளுக்கு மின்னனு மூலமாக வேளாண் விளைபொருட்கள் விற்பனை மற்றும் சந்தை...

வீடுகளை சூழ்ந்த கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

கிருஷ்ணகிரியில் பெய்துவரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்த கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி பழைய பேட்டை...

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து : கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழப்பு

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்...

நகைக்கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவி கைது

திருவாரூர் கடைவீதியில் நகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் கிரண்குமார்(42) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்....

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில்...

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் புதிய கற்கால கைக்கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் புதிய கற்கால கைக்கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் டி.பக்கிரிசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் செப்டம்பர் 2021 மாதத்தில் காட்சிக்கு...

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாற்றுத் திறனாளிகளை புறக்கணிப்பதாக புகார்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாற்றுத் திறனாளிகளை புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் செல்வநாயகம் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்...

‘முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்’ தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் 'முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்' தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுச்சூழல் காலநிலை...

இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், ராஜேந்திர பாலாஜி...

பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் கர்நாடக இளைஞர்

கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் சுதர்சன் பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் வயது 22. பி.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ் இறுதியாண்டு மாணவரான...

ஆலங்குடியில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் – கஞ்சா, குடிபோதையில் அருவாளாள் வெட்டி இளைஞர் பலியான சம்பவத்தில் 8 பேர்...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் கஞ்சா, குடிபோதையில் அருவாளாள் வெட்டி இளைஞர் பலியான சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகேசன் மகன்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தலின்போது வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அப்போது...

அரசு ஊழியர்களின் மாதாந்திர பிடித்தம் ரூ.60ல் இருந்து ரூ.110 ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குடும்ப...

மதச்சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் – உச்சநீதிமன்றம் வருத்தம்

மதச்சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அடியெடித்து வைக்கும்போது டெல்லி நிஜாமுதீன் பகுதியில்...

நாமக்கல் : கொல்லிமலை அடிவார பகுதியில் மாணவர் படிப்பிற்காக புதிய செல்போன் டவர் துவக்கி வைப்பு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய செல்போன் டவரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்டம்,...

வலி மற்றும் நோய்த் தணிப்பு சிகிச்சை மற்றும் இன்பவனம் திறப்பு விழா

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு தரைதளத்தில், அவசர அறுவை அரங்கு அருகில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையத்தினை கல்லூரி முதல்வர் மு.பூவதி இன்று திறந்து வைத்தார். இங்கு...

மருத்துவ படிப்பு : வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத தமிழக மாணவர்களின் இணைய வகுப்புகளை அனுமதிக்க வேண்டும் – கமல்ஹாசன்...

வெளிநாடுகளில் மருத்துவ படிக்கும் தமிழக மாணவர்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று பயில முடியாத நிலையில் அவர்களுக்கு இணைய வகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்...

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை : மயிலாடுதுறையில் விநாயகர் சிலைகள் தேக்கத்தால் மண்பாண்ட தொழிலாளர்கள்...

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளதால் மயிலாடுதுறையில் பல லட்சம் மதிப்பிலான மண் விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக...

உளுந்தூர்பேட்டை : 25 டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற பெண் உள்பட 5 பேர்...

உளுந்தூர்பேட்டை அருகே 25 டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதிகளில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று...

டெங்கு காய்ச்சல் : உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் ஒரே வாரத்தில் 40 உயிரிழப்பு – பொதுமக்கள் அச்சம்

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் டெங்கு காய்ச்சலால் ஒரே வாரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரில் மர்மக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 32 குழந்தைகள்...

தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் : பல பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம்...

தலைநகர் டெல்லியில் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்த...

இந்தியாவில் அனைத்து தொகுதிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்க கோரிக்கை

இந்தியாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தலைமையிடத்தில் அதன் உறுப்பினர்களுக்கு மக்கள் பணியாற்ற மத்திய அரசு அலுவலகம் அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த...

வீராணக்குன்னம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராணக்குன்னம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் வழிகாட்டலில் மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர்...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.92 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 45.45 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.92 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.45 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்...

ஒபிஎஸ் மனைவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான்

ஒபிஎஸ் மனைவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருகினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமியின் மறைந்த செய்தி...

திருக்குறள் பயிலும் ஆஸ்திரேலியா குழந்தைகள் : திருக்குறள் கற்று தரும் தஞ்சை மாணவி தேவஸ்ரீ

தஞ்சாவூரை சேர்ந்த குணசேகரன் சாந்தி தம்பதியரின் மகள் தேவஸ்ரீ(14). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்ரீ 1330 திருக்குறளையும் முழுமையாக...

தாலிக்குத் தங்கம் திட்டம் : மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் வழங்கப்படமாட்டாது – தமிழக அரசு

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் பயன்பெற தகுதியானோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8...

கேராளாவில் 2வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு : தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு மத்திய...

கேராளாவில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் 2வது நாளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று...

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு : மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சரமாரி கேள்வி

நாட்டில் 1991 போன்று 2021ல் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து...

சென்னை கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ்...

சென்னை கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய...

ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிச்சென்றவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு...

ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் ஓட்டிச்சென்றவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் தொகுதி...

தமிழகத்திற்கு 4 மாதங்களுக்கான நதிநீரை காவிரியில் இருந்து திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு 4 மாதங்களுக்கான நதிநீரை காவிரியில் இருந்து திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார்...

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா நிறைவேற்றம்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பாரதிதாசன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் கீழ் செயல்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் கடந்த அதிமுக...

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல் விவகாரம் தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் என்பவர் சென்னை...

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்று சாதனை : பெருமிதத்தில்...

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள்...

சாலையில் கிடந்த 3.5 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் சாலையில் கிடந்த ரூ. 3.5 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநருக்கு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பாபநாசத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர்,...

கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அயல்நாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்...

வனத்துறையை கண்டித்து கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமளம் பகுதியின் 15 ஆண்டுகால வறட்சிக்கு காரணமான வனத்துறை மற்றும் வனத்தோட்டக்கழகத்தின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து அரிமளம் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள்...

9, 10, 11, 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பையொட்டி அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் ஆய்வு

9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பையொட்டி அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச் செல்வம் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அரசின் பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையான வழிகாட்டு...

சுங்கச்சாவடிகளில் கட்டணம் கொள்ளை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும் சுங்கச்சாவடிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கு சுங்கசாவடியிலிருந்து காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை...

விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கூடாது என்று சர்வாதிகார ஆட்சியாக திமுகவின் ஆட்சி

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை ராம்நகரில்  உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கூடாது என்று சர்வாதிகார...

புதுக்கோட்டையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது முககவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

 புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் வடக்கு ராஜவீதிலுள்ளஆதிகாலத்து அலங்கார மாளிகையும்  இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கொரன விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி வாயிலாக நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியை , புதுக்கோட்டை   மாவட்ட  காவல்துறை ...

அலட்சியமான அறுவைச் சிகிச்சையின்போது பெண் மரணம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மாதர் சங்கம் வலியுறுத்தல்

தவறான அறுவைச் சிகிச்சையால் பெண்ணனின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மாதர்...

புதுக்கோட்டையில் நாளை முதல் பள்ளிகள் திறப்பின்போது மேற்கொள்ள வேண்டிய கோவிட் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய கோவிட்-19 முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில்...

உச்சநீதிமன்றம் : 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்...

உச்சநீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்கும் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ள...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனுக்கு சீல்- அதிகாரிகள் அதிரடி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 8,000-க்கும் அதிகமான நோயாளிகள்...

5 வகுப்புகள் மட்டுமே ஒரு நாளைக்கு நடத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  பெற்றோர் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.  தமிழ்நாட்டில் நாளை 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளி...

மைசூரில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பத்து நாட்கள்...

மைசூரில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பத்து நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திற்கு கடந்த 24ஆம்...

தமிழகத்தில் செப்.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு : நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – தமிழக...

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று...

டோக்கியோ பாராலிம்பிக் : பதக்க பட்டியலில் 7 பதக்கங்களை பெற்று 26வது இடத்தில் உள்ளது இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளின் பதக்க பட்டியலில் 7 பதக்கங்களை பெற்று இந்தியா 26வது இடத்தில் உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போட்டியில் 7வது நாளான இன்று...

பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

 ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது...

பழனி அருகே காவல்துறையை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு

பழனி அருகே, மஞ்சநாயக்கன்பட்டியில், காவல்துறையை கண்டித்து  செல்போன் டவர் மீது ஏறி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள, மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் செல்போன் டவரின் மீது ஏறி...

ஆரணி அருகே மிட்டாய்களை சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதில் பரபரப்பு – போலீசார் தீவிர...

ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் தரமற்ற (ரசாயனம் கலந்த) மிட்டாய்களை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆரணி தாலுகா முழுவதும்...

ஆலங்குடி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பள்ளத்திவிடுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து(48). இவரது மகள் பாரதி பிரபா(19) ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் உள்ள அவரது மாமா நடேசன் வீட்டில் கடந்த 20 நாட்களாக இருந்துள்ளார். இந்நிலையில்,...

ஆலங்குடி கலிபுல்லா நகர் பிள்ளையார் கோவில் அருகே இளைஞர் கொலை – மாவட்ட எஸ்பி ஆய்வு

ஆலங்குடியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடந்த கோஷ்டி மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகையன்...

புதுக்கோட்டையில் மக்கள் நடமாட்டமிகுந்த இரண்டு இடங்களில் உள்ள மின்மாற்றிகளை உடன் மாற்றி அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்...

 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றி  ( டிரான்ஸ்பார்மர்  )  கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது. மழை காலம் தொடங்கவிருக்கிறது.கொஞ்சம் வேகமாக காற்றடித்தால்கூட சாய்ந்த விடக்கூடய அபாய நிலையில் இருக்கிறது. சிமென்ட் கரையெல்லாம்...

செட்டிமாரம்பட்டியில் நந்திதேவா எருது இறப்பு : பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கோவிந்தன் என்கிற விவசாயி நந்தி தேவா என்ற எருதை வளர்த்து வந்தார். இந்த எருது கடந்த பல வருடங்களாக பல்வேறு...

வடமாநிலத்திலிருந்து குட்கா கடத்தி வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றுதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் கூடங்களாக மாறிவரும் சுங்கச்சாவடிகளை படிபடிப்யாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  கோவை, வேலூர், கடலூர் ஆகிய மண்டல அளவிலான  நிர்வாகிகள்...

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை - திருச்சி சாலையில் ரூபாய் 58 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி...

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி தொடர்ந்து 6வது நாளாக அன்னதானம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக அன்று முதல்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  அனைத்து ஒன்றியங்களில் உள்ள பேரூர் கழகங்கள் மற்றும் கிளைக்...

தியாகதுருகம் புறவழிச் சாலையில் கோர விபத்து – சுற்றுலா சென்று வீடு திரும்பிய சிறுவன் உட்பட 6 பேர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம்இ தியாகதுருகம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த எபினேசர்...

எஸ்.டி.பி.ஐ கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுவில் 2021-2024ம் ஆண்டுக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

எஸ்.டி.பி.ஐ கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் ஸலாஹூதீன் தலைமையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநில செயலாளர் சபீக் அஹமது மற்றும் புதுக்கோட்டை (கிழக்கு)...

மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் துபாய் பயணம்

மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்திற்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக...

சாமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த பட்டய கணக்கர் கொலை செய்து புதைப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி கோள்ளப்பட்டி மாந்தோப்பில் பணப்பிரச்சனை காரணமாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த பட்டயகணக்கர் (ஆடிட்டர்) கொலை செய்து புதைப்பு, சாமல்பட்டி போலீசார் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி காவல் நிலைய...

வலைதளங்களில் குழந்தைகள் வன்முறை வீடியோவை வெளியிடாதீர் என குழந்தைகள் நல செயற்பாட்டாளர் கோரிக்கை

குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த தாய் துளசி, ஆந்திராவில் கைது செய்யப்பட்டு விழுப்புரம் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  ஒன்றும் அறியாத ஒன்றரை வயதே ஆன பிஞ்சு குழந்தையை...

பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றார் அவனி லெகாரா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றார் அவனி லெகாரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான...

நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; நான் நடிகனாக மட்டும்தான் உள்ளேன் – சரத்குமார் பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் தனியார் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் வருகை புரிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தற்போது...

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர் – பிரதமர் மோடி புகழாரம்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலி வழியாக ஒவ்வொரு மாத...

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் : டேபிள் டென்னிஸ் மற்றும் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், டேபிள் டென்னிஸ் மற்றும் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில்...

ஆலங்குடியில் குடிபோதையால் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் : அரிவாளால் வெட்டியதில் இளைஞர் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குடிபோதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்தவர் முருகேசன் மகன் செல்லகணபதி என்கிற விஜய்(21). இவர் வைக்கோல்...

காந்தி மார்க்கெட் பகுதியில் 40 ஆயிரம் கிலோ தரமற்ற அரிசி மூட்டைகள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை...

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபுவிடம் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தான் நடத்தி வரும் நவாப் சீரகசம்பா அரிசி கம்பெனியின் பெயரை...

மதுரை : கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் தலைமையிலான...

மதுரையில் கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளதாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஏ.வ.வேலு...

மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு 17,000 ரூபாய் மதிப்பில் சுயதொழில் ஏற்படுத்தி கொடுத்த திருமயம் பாரத மிகுமின் நிறுவன ஊழியர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மூலமாக இயங்கக்கூடிய பாரத மிகுமின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளையின் மூலமாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில்...

நாமக்கல் : மோகனூரில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தமிழக அரசு உதவ...

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில்,...

ஆண்டிமடம் அருகே திருவாசகம் முற்றோதுதல்

ஆண்டிமடம் அருகே திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே, விளந்தை அகத்தீஸ்வரர் சிவன் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சிவனடியார்கள் தொண்டு மன்ற நிர்வாகிகள் பலர்...

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் செந்துறை பகுதி அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்

செந்துறை பகுதி அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றியத்தை சார்ந்த அதிமுக பிரமுகர்களான, உஞ்சினி ஊராட்சி மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் பெ.கண்ணன்,...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் – கமல்ஹாசன் வலியுறுத்தல்

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

கொரோனா பரவல் எதிரொலி : வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு பக்தர்கள் ஆலயம் வருவதை தவிர்க்க வேண்டும் :...

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்களின்றி இன்று தொடங்கவுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் ஆலயம் வருவதை தவிர்க்க பேராலய அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய...

புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர்கள் சமூக நல சங்க கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர்கள் சமூக நல சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக குமரமலை வைரவமூர்த்தி, செயலாளராக குன்றாண்டார்  கோயில் குமாரசாமி, பொருளாளராக திருக்கட்டளை ராஜா, அமைப்பு செயலாளர்...

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்- கலெக்டர் தகவல்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4ல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய...

போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க 3 மாதத்தில் புதிய அமைப்பை அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்...

போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க 3 மாதத்தில் புதிய அமைப்பை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி வேல்முருகன் ஆகியோர் அடங்கிய...

தலித் சமூதாயத்தினர் அமைத்த குடிசைகளை அடித்து நொறுக்கிய மாற்று சமூதாயத்தினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய...

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கடைவீதியில் விடுதiலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் ராஜ்மோகன் மணி வளவன் கலைவண்ணன்...

12,800 ஆணிகள் கொண்ட ஆணிபடுக்கையின் மீது ஏறி நின்றவாறு 15 மணி நேரம் வால் சுற்றி சோழன் உலக...

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன்  அத்தியாவசியத்தை வலியுறுத்தி 12,800 ஆணிகள் கொண்ட ஆணிபடுக்கையின் மீது ஏறி நின்றவாறு தொடர்ந்து 15 மணி நேரம் வால் சுற்றி சோழன் உலக சாதனை படைத்துள்ளார் விரகனூர்...

கர்நாடகா : இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது – ஒருவருக்கு போலீசார்...

கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து...

திண்டுக்கல்லில் இறைச்சிக்காக ஆடுவதை செய்தால் அபராதம் மாநகராட்சி அறிவிப்பு

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் இறைச்சிக்காக ஆடு வதை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவ...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் : போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளும் வாபஸ் –...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் முக.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை...

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.61 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 44.97 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.61 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44.97 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்...

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை அரசு விதை உற்பத்தியாளர்களுக்கான புத்தூட்ட பயிற்சி

வித்தே விளைச்சலுக்கு ஆதாரம் என்ற முதுமொழிக்கு ஏற்ப தரமான சான்று விதைகளை வழங்கியும் விதைத்தரத்தினை உறுதி செய்தும் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறை செயல்பட்டு வருகிறது. வேளாண் துறை முலம் தரமான...

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.  முகாம் லாரி மார்கெட்டில் நடைபெற்றது. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி  ரோட்டரி சங்க தலைவர் ஆர்.எம்...

விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால் தடையை மீறி நடத்துவோம் என்று இந்து...

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்து முன்னணியே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது.தற்போது...

50% பேருக்கு முதல் தடுப்பூசி நிறைவு – மத்திய அமைச்சர் தகவல்

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய...

வணிகரிடம் ரூ.10 லட்சத்தை பறித்த வழக்கு – தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் கைது

நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி வணிகரிடம் 10 லட்சம் ரூபாயை மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக...

ரூ.50 லட்சம் அபராதம்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய மறுத்த மாணவர்கள்

 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பணி செய்ய மறுக்கும் மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள...

இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல், விரைந்து நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு காமராஜர் நகர் பகுதியில் 1929 இல் மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலஆண்டுகளாக இருக்கும் இம்மயானத்தில் தற்போது மண்ணின் தன்மை கெட்டு விட்டதாகவும்,...

9,10,11,12 – ம் வகுப்புகளுக்கு வருகிற 1ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு. அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும்...

வருகிற 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி  புதுக்கோட்டை, இலுப்பூர் கல்வி மாவட்டங்களைச்சேர்ந்த உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான  முன்னேற்பாடு  கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக...

பழனி அருகே பொருந்தலாறு நியாயவிலை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அலகழிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பொருந்தலாறு டேம் பகுதியில்,500  குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர், இங்கு வசித்து வருபவர்கள், மீன் பிடித்தல்,  மற்றும்,கூலி தொழில் செய்து வருகின்றனர், இந்நிலையில் பொருந்தலாறு நியாய விலைகடையில்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டமசோதா தாக்கல்: முதலமைச்சர் ஸ்டாலின்

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று 7.5% இட ஒதுக்கீடு...

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் : டெல்லி பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின்...

ஆலங்குடி அருகே வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின் உயர் கல்வி கனவு நனவாகுமா?

ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின் உயர்க ல்வி கனவு நனவாக அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு தெற்குப்பட்டி...

கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்...

பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் : ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக்கூடாது- முதல்வர் ஸ்டாலின்

பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டப்படவுள்ளதாக, ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற...

செப் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சூடான சத்துணவு : தமிழக அரசு உத்தரவு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 2 முதல் 6 வயது வரையிலான...

உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 2 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்துள்ள ராமாநாதபுரம் கிராமத்தில், லட்சுமி - வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விறகு வெட்டியவர்கள்,...

நடுக்கடலில் அதிகாரிகளை சிறைபிடித்த புதுவை மீனவர்கள்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன் பிடித்த படகை பறிமுதல் செய்ய முயற்சித்த மீன்வளத்துறை மற்றும் காவல் படையினரும் சென்ற படகை புதுவை மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடித்தனர். தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்...

அறந்தாங்கி வட்டார மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்

அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகள்...

பள்ளிகள் திறப்பு : பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடி இருந்த நிலையில் வருகின்ற  செப்டம்பர் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ,...

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தல் – உக்ரைன் மற்றும் ஈரான் ராணுவ தளபதிகள்...

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை உக்ரைன் மற்றும் ஈரான் ராணுவ தளபதிகள் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா,...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சாட்சி ரவி தொடர்ந்த வழக்கின் மீது ஆக.27ல் தீர்ப்பு – சென்னை...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியான ரவி என்பவர் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஆக.27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் தனக்கு சில நபர்கள்...

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன்

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக ஊரக வளர்ச்சி...

கறம்பக்குடி பகுதியில் பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிற்கிணங்க  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதல் படி, கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன்...

மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தகவல்

வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி...

தமிழக அரசின் அலட்சியப் போக்கால், 2,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசிடம் மானிய நிலுவைத் தொகை தேங்கியுள்ளது...

வருகிற அக்டோபர் மாதம் துவங்கும் நெல் சீசனில் நெல் கொள்முதலை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உண்டி கொடுத்தோர்...

பழைய ஓய்வூதியத்தினை நடைமுறை படுத்திட வேண்டும் : முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கடிதம்

பழைய ஓய்வூதியத்தினை நடைமுறை படுத்திட வேண்டும் என முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப்...

தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி.ராகவன் விலகல்

தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ ஒன்று இன்று காலை வெளியான நிலையில் அவர் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து...

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதத்துக்குள்...

கொரோனா 3வது அலை : குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை – மருத்துவர் திரேன்...

கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் நிபுணர் மருத்துவர் திரேன் குப்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,...

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு : கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் –...

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சசிகலா, இபிஎஸ் உள்ளிட்டோரை விசாரிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஐகோர்ட்டில் மனு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, இபிஎஸ், சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரை விசாரிக்க கோரி குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு...

ஆப்கானிஸ்தான் விவகாரம் : அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க ஆக.26ல் கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பிற நாட்டினர் அங்கு வசிக்கும்...

ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் புனித தீர்த்தங்களில் நீராட தடை நீட்டிப்பு

வார விடுமுறையையொட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் இன்று காலை முதல் தடை நீக்கபட்டதால் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில்...

சென்னை : உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை –...

சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சத்தியநாராயணன்(26), சூரியநாராயணன்(24) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தம்பி சூரியநாராயணனுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. ஆனால் அண்ணன் சத்தியநாராயணனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சத்யநாராயணன் திருநின்றவூரில்...

நாமக்கல்லில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தை அரசு தரக்கட்டுப்பாடு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

நாமக்கல் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் மூலம் நாமக்கல்லில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகளை தற்போதைய அரசு தர கட்டுப்பாடு செய்ய வேண்டும் என நாமக்கல் நகர...

டோக்கியோவில் நாளை துவங்கும் 16வது பாராலிம்பிக் போட்டிகள் : 160 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

டோக்கியோவில் நாளை துவங்கும் 16வது பாராலிம்பிக் போட்டிகளில் 160 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி...

மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்பு

மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்று கொண்டார். மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில்...

நாமக்கல் அருகே சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நாமக்கல் எம்.எல்.ஏ பங்கேற்றார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் புதன்சந்தை முதல் உடுப்பம் செல்லும் சாலையில் (கழிவுநீர்)...

24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டம் – இன்று முதல் தமிழகம் முழுவதும் துவக்கம்

24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டமானது இன்று முதல் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில்...

தமிழகம் : ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் – இன்று முதல் திரையரங்குகள், பூங்காக்கள் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளாக இன்று முதல் திரையரங்குகள், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து தமிழக...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 44.44 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44.44 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்...

காபூலில் இருந்து நாடு திரும்பிய இந்திய விமானம் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து நாடு திரும்பிய விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்து, தலீபான்...

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார். அவருக்கு வயது 89,ரத்தத்தில் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கல்யாண் சிங், கடந்த ஜூலை 4-ஆம் தேதி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள்...

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளையிலிருந்து காலை 5.30 மணி முதல் இரவு 11 மணிவரை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்...

பிரபல யூடியுபர் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டம் உறுதி : அறிவுரைக் கழகம்

பிரபல யூடியுபர் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்தது. பப்ஜி மதன் மீது, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில்,...

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வீடுதேடி வரும் : சென்னை மாநகராட்சி

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வீடுதேடி வரும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும்...

பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம் : திரை உலகினர் அஞ்சலி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவரான நல்லெண்ணெய் சித்ரா இன்று நள்ளிரவு 2 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த 80களில் பிரபல...

உளுந்தூர்பேட்டை : ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் – 5 பேர் கைது

உளுந்தூர்பேட்டையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா,...

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி – தமிழக அரசு

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை...

கொரோனாவால் கேரளாவில் களையிழந்த ஓணம் கொண்டாட்டம்

கேரளாவில் கொரோனா அச்சம் காரணமாக, வழக்கமான உற்சாகமின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகைகை கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள புராணப்படி மக்களைச் சந்திக்க வரும் மாவலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை கொண்டாப்படுகிறது. வழக்கமாக...

ஆலங்குடி அருகே கிராவல் குவாரி குளத்தில் விழுந்து ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு அறையப்பட்டியைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் சேகர்(47). இவர் ஆலங்குடி அரசமரம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மனைவி சரோஜாவிடம்...

போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையிலான பணிகள் விரைவில் நிரப்பப்படும் – ராஜகண்ணப்பன்

போக்குவரத்து துறையில் வாரிசுதாரர்களுக்கு காலியாக உள்ள கருணை அடிப்படையிலான பணியிடம் அனைத்தும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு நிரப்பப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதியளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில்...

நீட் தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. 198 நகரங்களில் இந்த...

6 பேர் கைது : சிவகாசி தொழிலதிபர் கொலை வழக்கு

சிவகாசி அருகே தொழிலதிபர் கொலை வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த சந்தனகுமார் என்பவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு...

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வடிகால் பகுதிகளிலமாவட்ட கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால் பகுதிகள் தூர்வாரப்படுவதையும், மேலும், பொதுப்பணித்துறை சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்கால்களும்...

மோடி அரசின் ஆட்சி : கார்ப்பரேட்டுகளுக்காகவா? அல்லது சாதாரண, ஏழை, எளிய மக்களுக்காகவா? – கே.எஸ்.அழகிரி கேள்வி

மோடி அரசு யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கார்ப்பரேட்டுகளுக்காகவா? அல்லது சாதாரண, ஏழை, எளிய மக்களுக்காகவா? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "மத்தியில்...

திண்டுக்கல் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு – போலீசார்...

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வத்தக்கவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு என்ற...

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் 100 நாள் சாதனை

 திருச்சி தெற்கு மாவட்ட தி மு க வின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க தலைவர் மு க...

அரியலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு 100% கொரோனா தடுப்பூசி சாதனை

அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பட்டு சேலை விற்பனை துவக்க விழா மற்றும் கர்ப்பிணிகளுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த, சுகாதாரத்துறையினருக்கு பாராட்டு விழா உள்ளிட்டவை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்...

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்தது....

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 10 ஆயிரம் குறைவு

இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 19,867 பேர் தேர்வை தமிழில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர...

கொரோனா 3வது அலையை சமாளிக்க ரூ.23,123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு

கொரோனா இலவச தடுப்பூசிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். தனது சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்தில் உள்ள சிம்லாவில் ஜன ஆசீர்வாத்...

கனமழை:டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியின் முக்கிய சாலைகளில் மழைநீர்...

ஓணம் பண்டிகை திருநாள்: பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து "ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்....

விநாயகர் சிலைகளை விற்க அனுமதி வேண்டி கலெக்டரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை விற்க அனுமதி வேண்டும்  என கோரிக்கை விடுத்தனர். காலம் காலமாக களிமண் மற்றும் காகித...

பயணிகளுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் முகக்கவசம்: இண்டிகோ ஏர்லைன்ஸ்க்கு அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் முகக் கவசம் தயாரித்து பயணிகளுக்கு வழங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலமாக விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்...

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது- பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருப்பதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக நிதியமைச்சர்...

சாதியை காரணம் காட்டி வளர்ச்சியை தடுக்கக் கூடாது – மு.க.ஸ்டாலின்

  ஆதி திராவிடர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சி சாதியை காரணம் காட்டி தடுக்கப்படக் கூடாது என்பதே அரசின் சிந்தனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில...

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

நாடு முழுவதும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மன்சுக் மாண்டவியா, நாட்டு மக்கள்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் 24ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் சார்பில் ஆயிரம் புதிய வணிகர்களை உறுப்பினராகும் பணி நடக்க உள்ளது.  தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கும்...