Varalaruu – 24/7 News Website https://varalaruu.com/ 24/7 News Website Mon, 15 Jul 2024 12:47:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://varalaruu.com/wp-content/uploads/2024/03/cropped-fav-icon-32x32.jpg Varalaruu – 24/7 News Website https://varalaruu.com/ 32 32 காவிரி பிரச்சினை தொடர்பாக திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது https://varalaruu.com/2024/07/15/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/ Mon, 15 Jul 2024 12:47:52 +0000 https://varalaruu.com/?p=150759 காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் கர்நாடக மாநிலம் மாதந்தோறும் தமிழகத்துக்கு தண்ணீரை திறக்க வேண்டும். தங்களது அணைகளில் தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பது சட்டவிரோதமானது. […]

The post காவிரி பிரச்சினை தொடர்பாக திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் கர்நாடக மாநிலம் மாதந்தோறும் தமிழகத்துக்கு தண்ணீரை திறக்க வேண்டும். தங்களது அணைகளில் தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பது சட்டவிரோதமானது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை உத்தரவிட்டும், தமிழகத்துக்கு தண்ணீரை திறக்க கர்நாடகம் மறுப்பது, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

கர்நாடகம் தண்ணீர் திறக்காவிட்டால், தமிழகம் பாலைவனமாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை தினந்தோறும் 2 டிஎம்சி வீதம் கர்நாடகம் வழங்க வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். காவிரி விஷயத்தில் உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில் உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்” என்றார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 50 பேரை கைது செய்த போலீஸார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

The post காவிரி பிரச்சினை தொடர்பாக திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150759
அம்மா உணவகங்களில் ‘பிரசாதமான சாதம்’ – அளவு குறைக்கப்பட்டதாக புகார் https://varalaruu.com/2024/07/15/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be/ Mon, 15 Jul 2024 10:50:30 +0000 https://varalaruu.com/?p=150755 சென்னை சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் இயங்கும் அம்மா உணவகங்களில் 3 கரண்டி சாதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கரண்டியாக குறைத்து வழங்குவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது: அம்மா உணவகம் தொடங்கப்பட்டபோது, அனைத்து அம்மா உணவகங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்டன. அனைத்திலும் மின் விசிறிகள் இயங்கும். தூய்மையான குடிநீர் கிடைக்கும். ஆனால் இப்போது பாழடைந்த கட்டிடமாக பராமரிப்பின்றி அசுத்தமாக கிடக்கிறது. முன்பு ரூ.5 -க்கு 3 கரண்டி […]

The post அம்மா உணவகங்களில் ‘பிரசாதமான சாதம்’ – அளவு குறைக்கப்பட்டதாக புகார் appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
சென்னை சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் இயங்கும் அம்மா உணவகங்களில் 3 கரண்டி சாதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கரண்டியாக குறைத்து வழங்குவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது: அம்மா உணவகம் தொடங்கப்பட்டபோது, அனைத்து அம்மா உணவகங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்டன. அனைத்திலும் மின் விசிறிகள் இயங்கும். தூய்மையான குடிநீர் கிடைக்கும். ஆனால் இப்போது பாழடைந்த கட்டிடமாக பராமரிப்பின்றி அசுத்தமாக கிடக்கிறது.

முன்பு ரூ.5 -க்கு 3 கரண்டி சாதம் கொடுப்பார்கள், வயிறு நிறையும். ஆனால் இப்போது 139-வது வார்டு, மேற்கு மாம்பலம், ராகவாரெட்டி காலனியில் உள்ள அம்மா உணவகம், 140-வது வார்டு, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில், மாந்தோப்பு மாநகராட்சி பள்ளி எதிரில் இயங்கும் அம்மா உணவகம் ஆகியவற்றில் ஒரு கரண்டி தான் கொடுக்கிறார்கள். இது போதுமானதாக இல்லை. இதுகுறித்து பணியாளர்களிடம் கேட்டால், ரிப்பன் மாளிகையில் போய் புகார் செய்யுமாறு கூறுகின்றனர். பணியாளர்கள் ஒருவரும் கனிவுடன் பேசுவதில்லை. அவர்களின் பேச்சும் மரியாதை குறைவாக உள்ளது.

அம்மா உணவகங்களில் பார்சல் கொடுக்க கூடாது. ஆனால் இட்லி போன்றவற்றை பார்சல் கொடுத்து, விரைவாகவே காலி செய்துவிடுகின்றனர். இதனால் பலருக்கு உணவு கிடைப்பதில்லை. எனவே, அம்மா உணவகத்தை தொடங்கியபோது, வழங்கிய அளவில் இப்போதும் சாதங்களை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “அம்மா உணவகங்கள் அனைத்தும் ரூ.5 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளன. சில உணவகங்களில் உணவு குறைவாக வழங்கும் புகார் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

The post அம்மா உணவகங்களில் ‘பிரசாதமான சாதம்’ – அளவு குறைக்கப்பட்டதாக புகார் appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150755
ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டி பலியிட்ட சம்பவம் ஏற்க முடியாதது : ஐகோர்ட் கண்டனம் https://varalaruu.com/2024/07/15/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae/ Mon, 15 Jul 2024 10:44:56 +0000 https://varalaruu.com/?p=150752 ஆட்டின் கழுத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை மாட்டி ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் ஏற்க முடியாத ஒன்று என உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தார். இதையடுத்து திமுகவினர் சிலர் அண்ணாமலையின் உருவப்படத்தை ஆடு ஒன்றின் கழுத்தில் மாட்டி அந்த ஆட்டை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர். பின்னர் ஆட்டின் ரத்தத்தை […]

The post ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டி பலியிட்ட சம்பவம் ஏற்க முடியாதது : ஐகோர்ட் கண்டனம் appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
ஆட்டின் கழுத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை மாட்டி ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் ஏற்க முடியாத ஒன்று என உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தார். இதையடுத்து திமுகவினர் சிலர் அண்ணாமலையின் உருவப்படத்தை ஆடு ஒன்றின் கழுத்தில் மாட்டி அந்த ஆட்டை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர். பின்னர் ஆட்டின் ரத்தத்தை நடுரோட்டில் தெளித்து அண்ணாமலைக்கு எதிராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, “இதுபோன்ற கொடூர சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் ஆளுங்கட்சியினருக்கு எதிராக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போல உருவகப்படுத்தி, அதை நடுரோட்டில் துடிதுடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் கிரிமினல் குற்றம் மட்டுமின்றி, விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழும் குற்றம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்ற செயல்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். அண்ணாமலை மட்டுமின்றி எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களையும் இதுபோல கால்நடைகளின் கழுத்தில் மாட்டி வெட்டிக் கொல்வதை அனுமதிக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் ஏற்க முடியாத ஒன்று என கருத்து தெரிவித்து, ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்றவர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பாக ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டி பலியிட்ட சம்பவம் ஏற்க முடியாதது : ஐகோர்ட் கண்டனம் appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150752
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள்  9 பேர் திடீர் இடமாற்றம் : பள்ளிக் கல்வித் துறை அதிரடி https://varalaruu.com/2024/07/15/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/ Mon, 15 Jul 2024 10:39:40 +0000 https://varalaruu.com/?p=150749 தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 9 பேருக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் ஜெ.குமரகுருபரன் இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 9 பேருக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தொடக்கக் கல்வி இணை இயக்குநர் ச.சுகன்யா மாற்றப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். […]

The post தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள்  9 பேர் திடீர் இடமாற்றம் : பள்ளிக் கல்வித் துறை அதிரடி appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 9 பேருக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் ஜெ.குமரகுருபரன் இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 9 பேருக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தொடக்கக் கல்வி இணை இயக்குநர் ச.சுகன்யா மாற்றப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராக பணியாற்றும் ச.கோபிதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (நிர்வாகம்) பணியமர்த்தப்படுகிறார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக (நிர்வாகம்) உள்ள அ.ஞானகவுரி மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (மேல்நிலைக்கல்வி) நியமிக்கப்படுகிறார்.

தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) பணியாற்றி வரும் க.ஸ்ரீதேவி இடமாற்றம் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகள் இணை இயக்குநரான செ.சாந்தி மாற்றப்பட்டு தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) நியமிக்கப்படுகிறார்.

பள்ளிக் கல்வி இணை இயக்குநரான (தொழிற்கல்வி) எம்.ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, தனியார் பள்ளிகள் இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநராக பணியாற்றி வரும் வெ.ஜெயக்குமார் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (தொழிற்கல்வி) நியமிக்கப்படுகிறார்.

ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரான கே.முனுசாமி இடமாற்றம் செய்யப்ப[ட்டு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மற்றொரு இணை இயக்குநரான ந.ஆனந்தி மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள்  9 பேர் திடீர் இடமாற்றம் : பள்ளிக் கல்வித் துறை அதிரடி appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150749
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு https://varalaruu.com/2024/07/15/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88/ Mon, 15 Jul 2024 10:32:36 +0000 https://varalaruu.com/?p=150746 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேருக்கும் ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 30 அன்று கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப்படகுகள், நம்புதாளை கடற்பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு நாட்டுப்படகு என மொத்தம் நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு […]

The post இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேருக்கும் ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 30 அன்று கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப்படகுகள், நம்புதாளை கடற்பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு நாட்டுப்படகு என மொத்தம் நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற பார்த்திபன் (32), முரளி (42), சாரதி (28) மற்றும் ராமதாஸ் (52) ஆகிய நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் ஜுன் 17 அன்று கைது செய்யப்பட்டனர்.

இந்த 29 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று இவர்கள் 29 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், மீனவர்களின் காவலை ஜூலை 29 வரையிலும் நீட்டித்து உத்திரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150746
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசில் அங்கம் வகித்த போது திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம் : அண்ணாமலை https://varalaruu.com/2024/07/15/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa/ Mon, 15 Jul 2024 10:28:02 +0000 https://varalaruu.com/?p=150743 “தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மனதைக் குளிர்விக்க, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா? என்று கேட்டுள்ளார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதெல்லாம், திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம்,” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “காங்கிரஸ் ஆட்சியில், ஜனநாயகத்துக்கு விரோதமாகக் கொண்டு […]

The post கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசில் அங்கம் வகித்த போது திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம் : அண்ணாமலை appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
“தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மனதைக் குளிர்விக்க, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா? என்று கேட்டுள்ளார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதெல்லாம், திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம்,” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “காங்கிரஸ் ஆட்சியில், ஜனநாயகத்துக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதியை, அரசியலமைப்புச் சட்டம் படுகொலை தினமாக ஆண்டு தோறும் அனுசரிக்க, நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில், காங்கிரஸ் கட்சி சர்வாதிகாரமாகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை, பொதுமக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும், எத்தனை துயரங்களையும், இடையூறுகளையும் ஏற்படுத்தியது என்பதை, இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மனதைக் குளிர்விக்க, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா? என்று கேட்டுள்ளார்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதெல்லாம், திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு, அடுத்து வந்த 1980-ம் ஆண்டு தேர்தலில், நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று இந்திரா காந்திக்கும், அதன் பின் 2004-ம் ஆண்டு, இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்று சோனியா காந்திக்கும் சிவப்புக் கம்பளம் விரித்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் சொல்வாரா?

கடந்த 2006ஆம் ஆண்டு, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மத்தியில் அன்று காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சியில், அதிகாரமிக்கக் கட்சியாக, சர்வ வல்லமையுடன் சுற்றிவந்த திமுக, இந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை?

திமுக நினைத்திருந்தால், காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியிருக்க முடியாதா? மத்திய அமைச்சர் பதவிகளே பெரிது என்று மவுனமாக இருந்து விட்டு, தற்போது நாடகம் ஆடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டு காலமாக, திமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை. இனி வரும் ஆண்டுகளிலும் இடம் கிடைக்கப் போவதில்லை. மத்திய அமைச்சர் பதவிகளிலிருந்து பல ஆயிரம் கோடி ஊழல் செய்தே பழகிய திமுகவுக்கு, தற்போது பதவி இல்லாமல் என்ன செய்வது என்றே தெரியாமல், பொதுமக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

திமுக அரசு, தமிழகத்தில் தங்கள் முதல் கடமையான சட்டம் ஒழுங்கைச் சரிசெய்ய முதலில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீட் தேர்வு மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கும் கிடைத்து வரும் மருத்துவக் கல்வியை, தங்கள் கட்சியினர் வருமானத்துக்காக மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்வதற்காக, மாநில உரிமை என்ற போலி நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என்றும், தமிழக பாஜக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

The post கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசில் அங்கம் வகித்த போது திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம் : அண்ணாமலை appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150743
நில மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு https://varalaruu.com/2024/07/15/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/ Mon, 15 Jul 2024 10:16:24 +0000 https://varalaruu.com/?p=150740 நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூரில் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு […]

The post நில மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூரில் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் சகோதரர் எம்.ஆர்.சேகர் மற்றும் பிரவீண் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வாங்கல் போலீஸார் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடியானது.

இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி எம்ஆர்.சேகர் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. அரசியல் முன்விரோதம் மற்றும் காழ்ப்புணர்வு காரணமாக எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதுமை காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்கு உடல் ஒத்துழைக்காத நிலையில் மருத்துவமனையில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தந்தையுடன் உடனிருக்க வேண்டிய அவசியம் இருப்பதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post நில மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150740
தமிழகத்தில் பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளனர்  – அண்ணாமலை https://varalaruu.com/2024/07/15/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/ Mon, 15 Jul 2024 10:08:48 +0000 https://varalaruu.com/?p=150737 பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்? என்றும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு 2020-ல் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் காலை உணவு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் […]

The post தமிழகத்தில் பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளனர்  – அண்ணாமலை appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்? என்றும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு 2020-ல் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் காலை உணவு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு நிதி வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய கல்விக் கொள்கை மிக சிறப்பான திட்டங்களைக் கொண்டது. ஒரு மாநில அரசு அதனை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால், தமிழக அரசு அதனை ஏற்காமல் விதண்டாவாதம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை யார் செய்தாலும் அதை வரவேற்க வேண்டும். காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு, மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்குவது குறித்து ஒரு அளவுகோலையும் குறிப்பிட்டுள்ளது. எனவே, பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியங்கள் முட்டை உள்பட சத்தான உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு 100 சதவீதம் தயாராக உள்ளது. ஆனால், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காமல் அதன் பெயரை மாநில கல்விக் கொள்கை என்று மாற்றி, அறிக்கை தயார் செய்து வைத்துக் கொண்டு, அதனை வெளியிடாமல் உள்ளது.

நீட் தேர்வு தேவை என்பது எங்கள் நிலைப்பாடு, நீட் தேர்வு வருவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்பது குறித்தும், முதல் தலைமுறை பட்டதாரிகள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர் என்பது குறித்தும் விவரங்களை வெளியிட கேட்கிறோம். ஆனால் தமிழக அரசு, இதுவரை விவரங்களை வெளியிடவில்லை. மருத்துவக் கல்லூரிகளில் சேர நடுத்தர ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு தான் உதவி செய்கிறது.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின் இந்த ஆண்டு தான், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 59 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு என்பது சிறிய அளவில் தான் நடந்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சரணடைந்தவர் ரவுடி திருவேங்கடம். அவர் ஏன் தப்பி ஓட வேண்டும்? அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். போலீஸார் வெளியிட்டுள்ள குற்றவாளிகள் படம், சிசிடிவி காட்சிகள் போன்றவை அவர்கள் தான் கொலையில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை இவர்கள் ஏன் கொலை செய்தார்கள்? இவர்களை ஏவியது யார்? அரசியல் காரணமா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? இதையெல்லாம் விசாரிக்கத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பிஎம் கிசான் திட்டத்தில், 43 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு தலா ரூ.6,000 நிதி பெற்று வந்தனர். இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் மட்டுமல்லாமல், அரசு பணியில் இருப்பவர்கள், வார்டு கவுன்சிலராக இருப்பவர்கள் உள்ளிட்ட சிலரை தவிர்த்து, விவசாயிகள் அனைவரையும் சேர்க்கலாம் என்று மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்தது.

ஆனால், தமிழகத்தில் தற்போது 21 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 22 லட்சம் விவசாயிகள் மட்டுமே தற்போது, பிஎம் கிசான் திட்டத்தில் நிதி பெறுகின்றனர். விவசாயிகள் மத்திய அரசின் மீது அதிருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே விவசாயிகளை பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இதனை கண்டித்து திருச்சி தொடங்கி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழகத்தில் 4,372 அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் மாநிலம் முழுவதும் 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி காலிப்பணியிடங்கள் அனைத்தையும் தமிழக அரசு நிரப்ப வேண்டும். டெட் தேர்வு முடித்து ஏராளமான ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துள்ளனர். அவர்களுக்கு, தேர்தல் வாக்குறுதிபடி தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறினார். பேட்டியின் போது பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தமிழகத்தில் பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளனர்  – அண்ணாமலை appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150737
நேபாள பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார் https://varalaruu.com/2024/07/15/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/ Mon, 15 Jul 2024 08:54:14 +0000 https://varalaruu.com/?p=150734 நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா ஒலியை, நாட்டின் பிரதமராக அதிபர் ராம் சந்திர பாடேல் நியமனம் செய்தார். நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. இதையடுத்து, சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள […]

The post நேபாள பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார் appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா ஒலியை, நாட்டின் பிரதமராக அதிபர் ராம் சந்திர பாடேல் நியமனம் செய்தார்.

நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. இதையடுத்து, சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றது. இதையடுத்து, நேபாள காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார்.

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன் – யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், நேபாளி காங்கிரஸ் கட்சி 89 உறுப்பினர்களையும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-யுனிஃபைட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) 78 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, பிரதமர் பிரசந்தா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார். கடந்த வெள்ளிக்கிழமை, நேபாள பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வியடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் பதிவாகின.

இதனையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி இன்று பதவியேற்றார். நேபாள அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் 30 நாட்களுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பெரும்பான்மைக்கு 138 இடங்களே போதுமானதாகும். எனவே, கே.பி. சர்மா ஒலி இதில் எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நேபாள பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார் appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150734
நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து https://varalaruu.com/2024/07/15/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/ Mon, 15 Jul 2024 08:36:21 +0000 https://varalaruu.com/?p=150728 நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு கே.பி. சர்மா ஒலிக்கு நல்வாழ்த்துகள். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான […]

The post நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு கே.பி. சர்மா ஒலிக்கு நல்வாழ்த்துகள். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றுள்ள கே.பி.ஷர்மா ஒலிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, இந்தியாவும் நேபாளமும் தனிப்பட்ட நட்பு மற்றும் கூட்டாண்மை உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

மக்களிடையே வேரூன்றி இருக்கும் உறவுமுறை மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான தொடர்புகளுடன் கூடியது நமது உறவு. ஒளிமயமான எதிர்காலத்திற்காக பரஸ்பர ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியரும் எதிர்நோக்குகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

The post நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து appeared first on Varalaruu - 24/7 News Website.

]]>
150728