தமிழகம் முழுவதும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பல்வேறு வெப்பம் இன்னும் குறையவில்லை என்றும், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்கவேண்டும் என்றும் மாவட்ட் முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், வெயில் சுட்டெரிப்பதால், தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல் அமைச்சரிடம் கலந்தாலோசித்து ஜூன் 5 அல்லது 7 ஆகிய இரு தேதிகளில் ஏதாவது ஒன்றில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்.