பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காததால் பாஜக நிர்வாகி தடா பெரியசாமி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்துள்ளார். சிதம்பரத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவில் இருந்து விலகி உள்ளார். சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி என்பவர் அறிவிக்கப்பட்டதால் தடா பெரியசாமி அதிருப்தி அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தடா பெரியசாமி, “தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். பாஜகவில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். பாஜகவிலும் அங்கீகாரம் இல்லை; தலைமையும் கண்டு கொள்வது இல்லை,” என்று தெரிவித்தார்.