Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக...
Homeகல்வி9,10,11,12 - ம் வகுப்புகளுக்கு வருகிற 1ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு. அரசின் அனைத்து நிலையான...

9,10,11,12 – ம் வகுப்புகளுக்கு வருகிற 1ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு. அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்றவேண்டும். முன்னேற்பாடு கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேச்சு

வருகிற 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி  புதுக்கோட்டை, இலுப்பூர் கல்வி மாவட்டங்களைச்சேர்ந்த உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான  முன்னேற்பாடு  கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக தேர்வுக்கூட அரங்கில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித்து பேசும்போது  கூறியதாவது: வருகிற 1ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆகிய  வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள்   இயங்க  உள்ளன.

பள்ளிகள் திறப்பதையொட்டி  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி நிர்வாகத்தின்வாயிலாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட  பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்படுவதை ஒவ்வொரு தலைமையாசிரியரும் உறுதி செய்யவேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை வெப்ப பரிசோதனைக்கு பின் பள்ளி வளாகத்தில் அனுமதிக்க வேண்டும்.அதற்குரிய உடல் வெப்ப பரிசோதனைக்கருவி,

ஆக்‌ஸிமீட்டர் ஒவ்வொரு பள்ளியிலும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். பள்ளிகளில் கழிவறை,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் உள்ளதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அரசின் நிலையான அனைத்து  வழிகாட்டு நெறிமுறைகளையும்  பின்பற்றி மாணவர்களை சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும்  சரியான முறையில் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். சானிடைசர் மற்றும் சோப்பு நீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய  வேண்டும்.நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால்  வகுப்பறைகள் மற்றும் மாணவர்களின் இருக்கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். ஒரு வகுப்பறைக்கு குறைந்த பட்சம் 20 மாணவர்களும், அதிகபட்சமாக 25 மாணவர்களுக்கு மிகாமலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மாணவர்கள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும்போதும், பள்ளிக்கு வரும்போதும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன்  வருவதை உறுதி செய்யவேண்டும்.

  ஆசிரியர்களை  கொண்ட கண்காணிப்பு குழுவினை ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதை கண்காணிக்கவேண்டும். பள்ளிகளில்  கற்றல், கற்பித்தல் பணியினை தவிர வேற எந்த வித செயல்பாடும் நடைபெறக்கூடாது. 

ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும்  இன்று 27-08-2021 (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை  அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறும் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாமில்   பங்கேற்க செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவிக்கவேண்டும்.

மேற்கண்ட முகாமிலோ அல்லது  மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதல்படி  சுகாதாரத்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஒவ்வொரு நாளும்  அறிவிக்கப்பட்டு  நடந்துவரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கோ இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களை பங்கேற்க செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள தலைமையாசிரியர்கள் அறிவுரை கூறவேண்டும். பள்ளிகளுக்கு அவ்வப்போது வழங்கப்படும் வைட்டமின் மாத்திரைகளை உரிய முறையில் மாணவர்களுக்கு வழங்குவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்.

பள்ளியின் முகப்பில் அவசர உதவிக்காக சுகாதாரத்துறையினரின் தொலைபேசி, அலைபேசி,எண்களை எழுதி வைத்திருக்கவேண்டும்.எனவே அரசின் நிலையான அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறையினைச்சேர்ந்த  அனைவரும் தவறாது பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு மாணவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் எந்நேரமும் தங்களது பள்ளியை ஆய்வு செய்ய வரலாம்.எனவே பெற்றோர் ஆசிரியர் கழகத்துனருடனும் கலந்தாலோசனை செய்து  சரியான திட்டமிடலுடன்   மாணவர்களின் பாதுகாப்பை ஒவ்வொரு பள்ளித்தலைமையாசிரியரும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  தலைமையாசிரியர்களுக்கான இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்விஅலுவலர் கே.எஸ்.இராஜேந்திரன், அறந்தாங்கி இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்  மேல்நிலை ஜீவானந்தம் பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி,  மற்றும்  உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

x
error: Content is protected !!
%d bloggers like this: