75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் இருந்து நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் ஆகி உள்ளன. 75-வது சுதந்திர தினம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார்.

இந்த விழாவில் மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 2 =