75-வது சுதந்திரதினத்தைமுன்னிட்டுஆரோக்கியஇந்தியாசுதந்திரஓட்டம் 2.0.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிவு, நேரு யுவகேந்திரா  சங்கம்  மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து  நடத்திய ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம் 2.0 வினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கிவைத்து  தன் குடும்பத்துடன் ஓட்டத்தில்  பங்கேற்றார்.

இந்தியா 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மத்திய அரசு இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுகேந்திரா ஆகியவை ஒருங்கிணைந்து ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம் 2.0 , இன்றைய தினம் நடைபெற்றது இவ்வோட்டடமானது  மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து தொடங்கி  ஏகேடி பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்த ஓட்டத்தில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றன,ர் இந்த ஓட்டத்தின் நோக்கம் நம்நாடு 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை சிறப்பிக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக நடத்தப்பட்டது.இவ்வோட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்/ இயக்குனர் நெப்போலியன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரு கேந்திரா சங்க உறுப்பினர்கள், நாட்டு நலத் திட்டப் மாணவர்கள் பங்கேற்றனர்.