75வது சுதந்திர தின விழா அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளபிரான் ஊராட்சி வள்ளுவப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகர் ஆகியோர் கலந்துகொண்டு கடந்த அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் சுதந்திர தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு உள்ளிட்டவர்களை வழங்கினர்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 + = 58