75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா!!!

கோவையில் பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம் சார்பாக நாட்டுப்புற கலைகள் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 1 ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கிராமிய கலை, சிலம்பம், கராத்தே, நடனம் என  பல்வேறு துறைகளில் சாதனை செய்தவா்கள்  பீனிக்ஸ் உலக  சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் சாதனை புரிந்த 85 குழுக்களை தேர்வு செய்து தேசத்தின் பெருமை வாய்ந்த விருது வழங்கும் விழா கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வின் இளைஞர் அமைப்பின் தூதுவர் டாக்டர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

இதில் கிராமிய கலைஞர்கள், ஆசிரியர்கள், ஓவியர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் என பல்வேறு துறையை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விழாவில் கரகாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம், பறையிசை உள்ளிட்ட தமிழர் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் இவ்விழாவில் தமிழகம்,கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலாச்சார ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.