70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96.

மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்தார். இதனிடையே, பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார்.

பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக பதவியேற்றவர் அவரது 25 வயது மகள் 2-ம் எலிசபெத். அப்போது பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் வந்த சர் ஆண்டனி ஈடன், போரிஸ் ஜான்சன் தொடங்கி, லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். இப்போது 96 வயதாகும் ராணி எலிசபெத், 3 நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் புதிய பிரமதராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கணவர் மறைவு: கடந்த 2021-ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் கணவரும், எடின்பரோ கோமகனுமான பிலிப் காலமானார். கணவர் மறைவையடுத்து அவரது உடல் நலம் குன்றியது. குடும்பத்தார்: பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரது மகன்களும், இளவரசர்களான சார்லஸ், எட்வர்ட், ஆண்ட்ரூ, மகள் ஆனி ஆகியோர் அவருடனேயே இருந்தனர். ராணியின் மூத்த மகனான இளவரசர் சார்லஸின் மகன் வில்லியமும் அவருடனேயே இருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு மகன் ஹாரி, ஹாரியின் மனைவி மேகன் ஆகியோர் லண்டனுக்கு வந்தனர். ராணி எலிசபெத் வசித்து வரும் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள பாதுகாவலர்கள் தங்களது பணியை மாற்றும் நிகழ்ச்சி சேஞ்ச் ஆஃப் கார்ட் என்று அழைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − 85 =