
குடும்பம் நிறுவனத்தின் சார்பில் இன்று இரண்டாம் நாள் விதைத் திருவிழாவானது கிள்ளுக்கோட்டை மற்றும் விசலூர் என இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதில் 60 விவசாயிகளுக்கு 6 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள்¸ 5 வகையான சிறுதானியங்கள் மற்; மற்றும் வீட்டுத் தோட்டத்திற்கான காய்கறிகளின் விதைகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் நோக்கங்களையும்¸ கிராம அளவில் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்வது மற்றும் பரவலாக்கத்தின் அவசியம் குறித்து குடும்பம் தொண்டு நிறுவனத்தின் உதவி இயக்குநர் சுரேஷ் கண்ணா வலியுறுத்தினார். மேலும்¸ பாரம்பரிய ரகங்கள் எவ்வாறு குழந்தை முதல் முதியவர்கள் வரை அந்தந்த வயதிற்கு ஏற்றவாறு ஊட்டச் சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் பொதிந்துள்ளன என்பதை குறிப்பிட்டு அவற்றை மீட்டெடுப்பதில் விவசாயிகளுக்கு உள்ள பொறுப்பையும் கடமையையும் வலியுறுத்தினார்.
நவீன விவசாயத்தின் தாக்கம் உயிர்ச்சூழல் மீதும்¸ மக்களின் ஆரோக்கியத்திலும் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் குறித்தும்¸ வாழ்வியில் தொடர்பான மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள தொற்றா நோய்கள் கிராமங்களில் அதிகரித்து வருவது குறித்தும் பேசிய குடும்பம் நிறுவனத்தின் பயிற்சி இயக்குநர் ராமதாஸ்¸ ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதன் முறைகளையும்¸ பாரம்பரிய நெல் ரகங்களின் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஒற்றை நாத்து நடவு முறைகளில் உள்ள தொழிற்நுட்பங்கள் மற்றும் மகசூலை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். சிறுதானிய மற்றும் காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.
நிகழ்விற்கு வந்திருந்தவர்களை குடும்பம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சுப்ரமணி வரவேற்றார். கொழிஞ்சி பண்ணையின் செல்லதுரை நன்றி கூறினார்.




