புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தட்டா ஊரணி இளங்கோவனுக்குச் சொந்தமான ஆடு ஒன்று அதே பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வந்துள்ளது.
இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி தீயணைப்புத் துறை வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் மீட்கப்பட்ட ஆட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.