5வது நாள் நடைபயணத்தை கேரளாவில் தொடங்கினார் ராகுல் காந்தி

கேரளா, செறுவாரகோணத்தில் ராகுல் காந்தி தனது 5 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், கேரள எல்லையில் இன்று தனது 5 வது நாள் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 + = 45