தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி)த்தில், 24 சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. 2 வருடத்துக்கு ஒருமுறை 24 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வாக்களித்து பெப்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்வார்கள்.
திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவரான ஆர்.கே.செல்வமணி, பெப்சி தலைவர் பதவிக்கும், தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தைச் சார்ந்த பி.என்.சுவாமிநாதன் செயலாளர் பதவிக்கும், செந்தில்குமார் பொருளாளர் பதவிக்கும், துணைத்தலைவர்கள் பதவிக்கு இசையமைப்பாளர் தினா, ஆர்ட் டைரக்டர் மோகனமகேந்திரன், ஸ்டன்ட் மாஸ்டர் தவசி, நடன இயக்குநர் மாரி உட்பட முந்தைய நிர்வாகிகளே இம்முறையும் போட்டியிட்டனர்.
இவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அனைவரும் போட்டியின்றித் தேர்வாகின்றனர். ஆர்.கே.செல்வமணி தொடர்ந்து 4-வது முறையாக பெப்சி தலைவராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.