
பழம்பெரும் நடிகர் பி யு சின்னப்பாவின் 71வது நினைவு நாளை முன்னிட்டு குரு பூஜை விழா இன்று புதுக்கோட்டை சின்னப்பா நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் பங்கேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில்: அந்த காலத்திலே மிக குறைந்தபட்ச 35 வயதிற்குள் வரலாற்று சிறப்புமிக்க சாதனங்களை படைத்தவர். அவர் நடித்த அத்தனை படங்களும் சாதனை படைத்து ஓராண்டு வரை தியேட்டரில் ஓடின மக்கள் கண்டு களித்தனர். இந்த தமிழ் பேசும் மக்கள் திரையுலகம் உள்ளவரை அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்றார்.

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டில் அதிமுக கவுன்சிலர் சுப செந்தில்குமார் சொந்த நிதியில் சின்னப்பா நகர் முழுவதும் அமைக்கப்பட்ட 20 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ராமையா, நகரச் செயலாளர்கள் சேட்டு, பாஸ்கர் மற்றும் பழனிவேலு, விஎம் கணேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.