3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 8ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் 8ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வால்பாறை, சின்னக்கல்லாரில் தலா 5 செ.மீ, ராசிபுரம், ஹாரிசன் எஸ்டேட் பகுதியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.