தமுமுக-வின் 30ம் ஆண்டு துவக்க விழா – ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள்

ராமநாதபுரத்தில் தமுமுகவின் 30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30வது ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிட்டிருந்த பத்திரிக்கை அறிக்கையில்,”29 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத் தொண்டு, மனித உரிமை, கல்வி விழிப்புணர்வு என இழந்த உரிமைகளை மீட்போம் இருக்கும் உரிமைகளைக் காப்போம் என்ற முழக்கத்துடன் புறப்பட்டு இன்று 30ம் ஆண்டில் நுழைகின்றது தமுமுக.

இத்தருணத்தில் தமுமுகவின் தொண்டில் தங்களை இணைத்துக் கொண்டு அர்ப்பணிப்புடன் களமாடிய அனைத்துச் சகோதரச் சகோதரிகளையும் இத்தருணத்தில் நினைவு கூறுகிறோம். மேலும் வீரியத்துடனும் விவேகத்துடனும் நமது அர்ப்பணிப்பு தொடர்வோம், என ஜவாஹிருல்லா தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, இன்று ராமநாதபுரம் மாவட்ட தமுமுக அலுவலகத்தில் நடைபெற்றது. தமுமுக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இப்ராஹிம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கொடியேற்றினார்.

மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், நகர் தலைவர் ஜாகிர் பாபு, துணை செயலாளர் சாகுல் ஹமீது, மண்டல செயலாளர் அப்துல் வாஜித், நிர்வாகிகள் பிஸ்மில்லா கான், தாஜுதீன், சுலைமான் ஜாகிர் பாபு, நகர் செயலாளர் முகம்மது தமீம், மைதீன் கனி, செய்யது அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மருத்தவ உதவி, கல்வி உதவித் தொகைள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம் அருகே உள்ள மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.