பிரதமருக்கு எதிரான கருத்து தெரிவித்த திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளோம் : அண்ணாமலை

“பிரதமர் குறித்து கீழ்த்தரமாக பேசிய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக சார்பில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். உரிய விசாரணை நடத்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளையும், மன்னிக்க முடியாத பொதுப் பேச்சுகளையும் வெளியிட்டு திமுக தலைவர்கள் தங்களின் நேர்மையற்ற நடத்தையில் புதிய தரம்தாழ்ந்த நிலையை அடைந்துள்ளனர். விமர்சிக்க எதுவுமே இல்லாத போது, திமுக தலைவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள். அந்த மேடையில் இருந்த திமுக எம்.பி. கனிமொழியும், தன் கட்சிக்காரரை தடுக்கவில்லை.

பிரதமர் குறித்து கீழ்த்தரமாக பேசிய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக சார்பில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். உரிய விசாரணை நடத்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.