அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தை ஜாமின் வழங்கி, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அணையிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரை மிரட்டி அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைந்தனர்.

இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், இடைக்கால ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது.

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசு அனுமதி இன்றி வெளியூர் செல்ல கூடாது. விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கு சாட்சியங்களை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை குறிப்பிட்டுள்ளது. மேலும், அங்கித் திவாரி வழக்கு குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கை வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.